Home காமசூத்ரா திருமணமா? இக்காலத்து பெண்கள் எப்படிப்பட்ட மணமகனை எதிர்பார்க்கிறார்கள்?

திருமணமா? இக்காலத்து பெண்கள் எப்படிப்பட்ட மணமகனை எதிர்பார்க்கிறார்கள்?

472

தன் கணவன் எப்படி இருக்க வேண்டும்? திருமண வாழ்வு எப்படி அமைய வேண்டும்? என்ற கனவு எல்லா பெண்களுக்கும் உண்டு. ஆனால் இந்த கனவுகள் கனவாக மட்டுமே இருக்கிறதா அல்லது நிஜமாகிறதா என்பதெல்லாம் அவளுக்கு அமையும் கணவனை பொறுத்து தான். அப்படி பெண்களது திருமண கனவுகள் என்னவாக இருக்கும் என விசாரித்த போது கிடைக்கப்பெற்ற சுவாரஸ்யமான தகவல்கள்.

wedding dream-marriage bride groom

#1. குறைந்த பட்சம் ஐந்திலக்க எண்ணில் வருமானம். இல்லையெனில் அரசாங்க உத்தியோகம். என்ன கேட்டாலும் யோசிக்காமல் வாங்கி கொடுக்கவே இந்த எதிர்பார்ப்பு. மற்றபடி எந்த உள்நோக்கமும் இல்லை.

#2. மீசை தாடி கொண்ட கரடு முரடான தோற்றத்துடன் இருக்க வேண்டும், அமுல் பேபி போல வேண்டாம். உயரம் ஆறடிக்குள், வயது முப்பதுற்குள்.

#3. கணவன் எப்போதும் ரொமான்டிக் ஹீரோவாகவே இருக்க வேண்டும். ஜில்லுனு ஒரு காதல் சூர்யாவை விட பத்துமடங்கு.

#4. தேனிலவு வெளிநாட்டில் இருந்தால் சந்தோஷம். இல்லையெனில் பக்கத்தில் இருக்கும் அந்தமானிற்காவது அழைத்து செல்ல வேண்டும்.

#5. பெண்கள் அப்பாவின் லிட்டில் பிரின்சஸ்ஸாக இருக்கலாம். ஆனால் பையன் அம்மா பிள்ளையாக இருக்க கூடாது.

#6. ‘வாடா போடா’ என அழைப்பதை கண்டுகொள்ளாத கணவன். அப்போதுதானே உறவில் ஆழம் அதிகமாகும். மற்றவர்கள் முன்னாடி ‘அவங்க இவங்க’ தான்.

#7. மனைவியை மட்டும் ரசிக்க தெரிந்தவன் அடிக்கடி பாராட்ட தெரிந்தவனாக இருக்க வேண்டும்.

#8. இன்னும் சிலரது எதிர்பார்ப்பு பிரபல ஷோவில் சொன்னது போல, மாப்பிள்ளையிடம் இருந்து எதுவும் வேண்டாம், கழுத ஹெலிகாப்டரில் வந்து கூட்டிட்டு போனால் கூட போதும். அப்படித்தான் உள்ளது.

#9. தன் தாய் வீட்டை தனது குடும்பமாக பார்ப்பவர். சண்டை போட்டால் அவரே முதலில் சமாதானப்படுத்த வேண்டும்.

#10. ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்தால் நோ சொல்லக்கூடாது. ப்ரைஸ் டேக் பார்த்து பர்சேஸ் செய்யக்கூடாது.

#dreamwedding: மேற்கண்ட எத்தனை எதிர்பார்ப்புகள் இருந்தாலும் கனவுகள் ஏமாற்றப்பட நேர்ந்தாலும் கிடைத்த வாழ்க்கையை அழகாக்கும் திறமை பெண்ணிற்கு மட்டுமே உள்ளது.