Home பெண்கள் தாய்மை நலம் திருமணமான பெண்களுக்கு ஓர் அதிர்ச்சித் தகவல்

திருமணமான பெண்களுக்கு ஓர் அதிர்ச்சித் தகவல்

22

nvd-300x215திருமணமான பெண்கள், விரைவில் கருத்த‍ரிக்க‍வே விரும்புகின்றனர். ஆனாலும் பிள்ளைப்பேறு தாமதப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இது பற்றிய ஓர் அதிர்ச்சியான
தகவல் சமீபத்தில் வெளியாகியுள்ள‍து.
திருமணமான பெண்கள், நாள்தோரும் 4 குவளை காபி அருந்துவதும், வாரம் மூன்று கப் மது அருந்துவதும் கருவுறுதல் சிக்கலில் ஒரே அளவு பாதிப்பை ஏற்படுத் துகின்றன என்று ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.

இதனால் பெண்களுக்கு 25% குழந்தை பிறக்கும் வாய்ப்பு குறைகிறது.
காஃபைன் என்பது கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன் கலந்த ஒரு ரசாயனப் பொருள் ஆகும். இது உடலுக்கு சுறுசுறுப்பைத் தருகிறது, ஆனால் கூடவே இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்து இரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கி றது.

இவை உடலின் சமநிலையை சிறிது சிறிதாக பாதிப்புக்கு உள்ளாக்கு கின்றன.
குழந்தையின்மைக்குக் காரணமாக மருத்துவர்கள் பட்டியலிடும் புகைத்தல், மது அருந்துதல், அதிக உடல் எடை என்னும் அதி முக்கிய மூன்று காரணிக ளுடன் இப்போது காஃபைன் எனும் விஷப் பொருளும் இணைந்துள்ளது.
கருவுறுதலில் மட்டுமல்ல, தாய்மை நிலையிலிருக்கும் பெண்கள் காபி குடித்தால் அந்த நச்சுத் தன்மை கருவில் இருக்கும் குழந்தையைக் கூட சென்று தாக்குகிறது.
காபி குடித்துக் கொண்டே தினமும் ஒன்றுக்கு மேற்பட்ட சிகரெட்கள் புகைக்கும் பெண்கள், வாரம் தோறும் மூன்று கப் மதுவும் அருந்தினால் அவர்களுக்கு இயற்கையாக குழந்தை பிறக்கும் வாய்ப்பு வெறும் 5 விழுக்காடு என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.