Home அந்தரங்கம் திருமணபந்தத்தில் இணையும் ஜோடிகள் தொலைபேசியில் பேசிக்கொள்ளும் போது, அவர்களது இல்லற வாழ்வு குறித்து பேசிக்கொள்வது சரியா?

திருமணபந்தத்தில் இணையும் ஜோடிகள் தொலைபேசியில் பேசிக்கொள்ளும் போது, அவர்களது இல்லற வாழ்வு குறித்து பேசிக்கொள்வது சரியா?

67

திருமணம் நிச்சயம் ஆனதும் பெண்ணும் மாப்பிள்ளையும் தொலைபேசி எண்ணை பரிமாறிக்கொள்வதும் இத்தனை வருடங்களாக தேக்கி வைத்த கனவையும் காதலையும் சில மாதங்களிலே கொட்டிவிடுவதும் இந்த காலகட்டத்தில் நிலவும் அரேன்ஜ் மேரேஜ்களின் ஸ்டைல்.

திருமணத்திற்கு முன் நிச்சயத்திற்கு பின் உள்ள அந்த வசந்த காலத்தில் தாங்களே உலகத்தில் சிறந்த ஜோடி என சொல்லும் அளவிற்கு மனதில் மனக்கோட்டையை கட்டிக்கொள்வது, பிறந்தநாள், பொங்கல், தீபாவளி என எந்த நாளாக இருந்தாலும் சர்ப்ரைஸ் கொடுத்து இம்ப்ரெஸ் செய்வது, வேலையை கூட பார்க்காமல் லவ்வோ லவ்வென்று இருப்பது. உங்க நண்பர்கள் யாரேனும் இப்படி இருந்தால் டீப்பாக வாட்ச் பண்ணுங்க! அவர்களை கையில் பிடிக்க முடியாது. அப்படியே வானில் மிதப்பார்கள். அதுவும் ஒரு சில ஜோடிகள் காதலை கடந்து எப்போதோ இல்லற வாழ்வு பற்றி ஆலோசிக்க ஆரம்பித்திருப்பார்கள்.

திருமணம் ஆன ஆறே மாதங்களில் எல்லாவற்றையும் கொட்டிவிட்டு, சரி நம்ம பொழப்ப பார்ப்போம் என சகஜ வாழ்க்கைக்கு திரும்பிவிடுவார்கள். அதுவும் ஒரு சில ஜோடிகள் எழுபது ஆண்டுகள் வாழ்ந்தது போல சலிப்பாக பேசுவார்கள்.காதலிக்கும் போது பொங்கல், தீபாவளிக்கு எல்லாம் போன் பண்ணி வாழ்த்து சொன்ன ஆளு, கல்யாணத்திற்கு பிறகு என்னோட பிறந்தநாள் கூட உனக்கு மறந்து போச்சா? என மனைவி ஒரு பக்கம் கிளம்புவாங்க. ஸ்டார் ஹோட்டல் அளவுக்கு மெனு சொன்னையே! இப்போ நீ வைக்கிற ரசத்த கூட வாயில வைக்க முடியல என கணவர் ஒருபக்கம் கிளம்ப, களேபரம் மெல்ல துளிர்விடும்.

lovers-conversation love marriage-dream wedding

காதல் என்பது எல்லோரிடமும் கிடைத்துவிடாது. அந்த அன்பு கிடைக்காத வரை அந்த அன்பிற்க்காக ஏங்குவதும், கிடைத்த பின் அதை உதாசீனபடுத்துவதும் தான் பலரது வாழ்க்கை ஸ்டைலாக உள்ளது. அப்படியானால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில்(arranged marriage) இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள தொலைபேசி உரையாடலை தொடரக்கூடாதா? என்ற சந்தேகம் தான் அடுத்து எழும். தொலைபேசி உரையாடலில் இருவருக்குள்ளும் இருக்கும் சந்தேகங்களை பரிமாறிக்கொள்வது சரியே! அதை தவிர்த்து மற்ற உரையாடல் எல்லாம், ஒருவரை ஒருவர் இம்ப்ரெஸ் செய்ய மட்டுமே.

திருமணமான பின்னரே இருவரது நிஜ முகம் எட்டிப்பார்க்க ஆரம்பிக்கும். திருமணத்திற்கு முன், அதிகப்படியான எந்த பரிமாற்றமும் இன்றி உள்ளதை உள்ளபடியே நேரிலே பார்த்து புரிந்து கொள்ளும் போது, தேனிலவு தேனாக தித்திக்கும். இல்லையெனில் தேனிலவிற்கு பின்னர் வாழ்க்கை முழுவதும் இருவரும் தேனீ போல ஒருவரை ஒருவர் கொட்டிக்கொண்டே இருந்துவிடுவார்கள்.