Home உறவு-காதல் திருமணத்திற்கு பின்னரும் ஆசைக் காதல்: இதோ டிப்ஸ்

திருமணத்திற்கு பின்னரும் ஆசைக் காதல்: இதோ டிப்ஸ்

30

couple-love-people-romantic-696x464திருமண உறவிற்கு பின்னர் கணவர் மனைவிக்கிடையே காதல் இருந்தால் தான் வாழ்க்கை

இனிமையாக இருக்கும்.
ஆனால் இந்த திருமண வாழ்க்கை, காலம் செல்ல செல்ல சிலருக்கு சலிப்பை ஏற்படுத்திவிடுவது உண்டு.

இதனால் தம்பதியினருக்கிடையே மனஸ்தாபங்கள் ஏற்பட்டு விவகாரத்தும் பெறும் நிலை, இன்றைய காலகட்டத்தில் அதிகளவில் நிகழ்ந்து வருகிறது.

ஆனால் அவ்வாறு திருமண பந்தத்தை முறித்துக் கொள்ளாமல் சில எளிமையான வழிமுறைகளை நாம் மனதில் கொண்டால் நம் மண வாழ்வு என்றும் இனிக்கும்.

உறவில் புதுமைகளையும், புத்துணர்ச்சியையும் சேர்க்க சில டிப்ஸ்

தினமும் ஐ லவ் யூ சொல்லுங்க

உங்கள் காதலை சைகைகள், முத்தங்கள், முக்கியமாக வார்த்தைகளால் அடிக்கடி வெளிப்படுத்துங்கள்.

தினமும் ஒரு முறையாவது”ஐ லவ் யூ” என கூறுங்கள். அப்படி செய்யும் போது அவரின் கண்ணை பார்த்து சொல்லுங்கள்.

சப்ரைஸ் கொடுங்க

வாரம் ஒரு முறையாவது ஆச்சரியங்களை அளியுங்கள். அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

அது காதல் கடிதம் அல்லது பூச்செண்டு அல்லது வார இறுதி சுற்றுலா என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

மனம் திறந்து பேசுங்கள்

நீங்கள் மனதில் நினைக்கும் காதல் வார்த்தைகளை அவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஏனெனில் சின்ன பேச்சுக்களும் செல்ல சண்டைகளும் உறவை என்றும் மணமுடைய பூவை போல் பாதுகாக்க வழிவகுக்கும்.

டேட்டிங் செல்லுங்கள்

உங்களையும் உங்கள் துணையையும் மீண்டும் ஒரு முறை கண்டுபிடியுங்கள்.

நல்ல ஒரு இடத்தை தெரிவு செய்வது முக்கியம். குறிப்பாக சிலருக்கு அமைதியான இடம் செல்வது பிடிக்கும்.

ஏனெனில் அதுவே பேசுவதற்கு தகுந்த இடம் இருப்பதால் அங்கு சென்று உங்கள் துணையுடன் நேரத்தை செலவிடுங்கள்

நினைவலைகளை அலசுங்கள்

உங்களது திருமணம் காதல் திருமணம் என்றால் காதலித்த காலங்களை பற்றி உங்கள் துணையிடம் பேசுங்கள்.

வீட்டில் செய்த திருமணம் என்றால் உங்களது புதுமண வாழ்க்கை நாட்களில் நிகழ்ந்த சுவாரஸ்யமான சம்பவங்களை பற்றி பேசி மகிழுங்கள்.

தோற்றத்தில் கவனம் தேவை

உங்கள் தோற்றத்தின் மீது அக்கறை கொள்ளாமல் சோம்பேறியாக இருக்காதீர்கள்.

வெளியே படத்திற்கு செல்லும் போதோ அல்லது படத்திற்கு செல்லும் போதோ உங்கள் துணையுடன் செல்லும் போது நீங்களும் அழகாக இருக்க வேண்டும்.

எனவே உங்களை அழகுப்படுத்திக்கொள்ள சற்று நேரம் ஒதிக்கி கொண்டு உங்கள் துணையுடன் மகிழ்ச்சி பொங்க செல்லுங்கள்.

சின்னசிரிப்பு போதும்

வாழ்வில் எத்தனை பெரிய துயரம் வந்தாலும் அதை உங்கள் கணவன்மாரிடம் சுட்டிக்காட்டாதீர்கள்.

அவர்களுக்கு பக்கபலமாக இருந்து, சிறிய புன்னைகையை பொழிந்து சில நல்ல விடயங்களை பேசி ஊக்குவித்தாலே திருமண வாழ்வு முறிய வாய்பே இல்லை.