Home பெண்கள் உடல் கட்டுப்பாடு தினமும் வெறும் பதினைந்து நிமிடங்கள் மட்டும் நடப்பதால் இவ்வளவு நன்மைகளா?

தினமும் வெறும் பதினைந்து நிமிடங்கள் மட்டும் நடப்பதால் இவ்வளவு நன்மைகளா?

32

ஆரோக்கியமாக வாழ ஜீம் போக வேண்டும் என்று இல்லை. நீங்கள் மிகவும் எளிதான முறையான நடைபயிற்சி மேற்கொண்டாலே போதுமானது. இது நீங்கள் ஆரோக்கியமாக வாழ மிகவும் எளிதான முறையான இதனை கடைப்பிடித்தாலே போதுமானது.
புதிய கண்டுபிடிப்பு ஒன்றில் நீங்கள் தினமும் 15 நிமிடங்கள் நடப்பது ஒன்று மட்டுமே உங்களது வாழ்நாளை அதிகரிக்க போதுமானது என்று தெரிவித்துள்ளது. இந்த பகுதியில் தினமும் 15 நிமிடங்கள் நடப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்களை பற்றி காணலாம்.

எலும்புகள் வலுவடையும் நீங்கள் முப்பது அல்லது முப்பது வயதிற்கு மேம்பட்டவராக இருந்தால், உங்களது எலும்புகளின் ஆரோக்கியம் சற்று குறைவானதாக இருக்கும். தினமும் 15 நிமிடங்கள் மட்டுமே நடப்பது உங்களது எலும்புகளை வளப்படுத்துகிறது. மேலும் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்தும் உங்களை பாதுகாக்கிறது.

கலோரி இழப்பு உங்களது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்க வேண்டியது அவசியம். இதற்காக நீங்கள் கடுமையான உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதிக எடை உடைய பெண்கள் தினமும் 15 நிமிடங்களாவது நடந்தாலே போதுமானது. முக்கியமாக 40 முதல் 66 வயது வரை உள்ளவர்கள் நடைபயிற்சி மேற்க்கொள்ள வேண்டியது அவசியம்.

மகிழ்ச்சி அமெரிக்காவில் கல்லூரி மாணவர்களை வைத்து நடத்தப்பட்ட ஆராய்ச்சி ஒன்றில் நடைபயிற்சியானது, உற்சாகத்தை தரக்கூடிய ஒன்றாக இருக்கிறது. இவர்கள் 12 நிமிடங்கள் தினமும் நடந்ததன் காரணமாகவே மகிழ்ச்சியாக நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்க முடிகிறதாம்.

சிந்தனை அதிகரிக்கிறது நடப்பதால் புதிய யோசனைகள் வருகிறதாம். அமர்ந்து யோசிப்பதை காட்டிலும் நடந்து கொண்டே யோசிப்பது மிகச்சிறந்தது. இனிமேல் உங்களுக்கு எதை பற்றியாவது யோசித்து நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்றால், நடந்து கொண்டே யோசிப்பீர்கள் சரிதானே?

இளமை தினமும் 15 நிமிடங்கள் நீங்கள் அமைதியான இயற்கை சூழ்ந்த இடங்களில் நடப்பதால், உங்களால் கூர்மையாக யோசிக்க முடியும். அதுமட்டுமின்றி, மனது சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குறையும். இளமை நீடிக்கும்.