Home அந்தரங்கம் தினமும் உடல் ரீதியான தீண்டுதலில் ஈடுபடுவதால் உண்டாகும் 5 நன்மைகள்!

தினமும் உடல் ரீதியான தீண்டுதலில் ஈடுபடுவதால் உண்டாகும் 5 நன்மைகள்!

30

hqdefaultதீண்டுதல் என்பது ஏதோ இச்சை உணர்வல்ல. ஆம், கணவன், மனைவிக்குள் தீண்டுதல் என்பது அவர்களது உறவை இணைக்கும், இணக்கத்தை அதிகரிக்க கூடிய ஓர் சக்தி அல்லது ஊன்றுகோல் என்று கூறலாம். வெறும் உடலுறவு மட்டுமே எப்படி நிலையான இல்லறம் ஆகாதோ. அதே போல உடலுறவு இல்லாத இல்லறமும் நிலையாக இருக்காது. உடலும், மனதும் சரியாக இணைந்த உறவே ஓர் முழுமையான இல்லற வாழ்க்கை. இதற்காக தான் மன ரீதியான, உடல் ரீதியான முதிர்ச்சி சரியாக கொண்டு ஆண், பெண் இல்லறத்தில் பயணிக்க வேண்டும் என நமது முன்னோர்கள் வயதி வித்தியாசம் அவசியம் என கூறினார். இனி, தினமும் உடல் ரீதியான தீண்டுதல்கள் இருக்க வேண்டும் என்பதற்கான 5 காரணங்கள் பற்றி பார்க்கலாம்…

காரணம் #1 புத்துணர்ச்சி! நீங்கள் உடல்ரீதியாக மட்டுமின்றி, மனம் ரீதியாகவும் சோர்வாக இருக்கிறீர்கள், சோகம் உங்களை சூழந்துள்ளது அதை தவிர்க்க வேண்டும் என்றால், நீங்கள் தினமும் துணையுடன் தீண்டுதல்களில் ஈடுபடுவது சரியான தீர்வை அளிக்கும். வெறும் உறவுக் கொள்வதால் என்பதை தாண்டி, அந்த நேரத்தில் உங்களுக்கு கிடக்கும் அரவணைப்பு ஓர் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

காரணம் #2 மனநல மேன்மை! உங்கள் மனதில் எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கிறது, தோல்வி பயம் தொற்றிக் கொண்டுள்ளது எனில், நீங்கள் தினமும் தீண்டுதலில் ஈடுபட வேண்டும். இது, உங்களுக்குள் இருக்கும் எதிர்மறை எண்ணங்களை போக்கி, மனநலம் மேலோங்க உதவும்.

காரணம் #3 உறவில் இணக்கம்! உங்கள் இருவருக்குள்ளேயே மனஸ்தாபம் இருக்கிறது, சரியான இணக்கம் இல்லை எனில், நீங்கள் தினமும் தீண்டுதலில் ஈடுபட வேண்டும். இது, உங்கள் உறவு பாலத்தை இணைக்கும், இறுக்கமடைய செய்யும். உங்கள் இருவருக்குள் மீண்டும் ஓர் மறுமலர்ச்சி உண்டாக பயனளிக்கும்.

காரணம் #4 தனிப்பட்ட தேவைகள்! அரவணைப்பு, அன்பு, அக்கறை என்பதை தாண்டி தீண்டுதல் என்பது தம்பதிகளுக்கு மத்தியில் ஓர் தனிப்பட்ட தேவையும் கூட. யோகாவிற்கு இணையான மனதை ஒருமுகப்படுத்தும் தன்மை கொண்டது தாம்பத்தியம். எனவே, உங்கள் உறவில் இந்த தீண்டுதலுக்கு தடா விதிப்பதும், நீண்ட இடைவேளை எடுத்துக் கொள்வதும் தவறு.

காரணம் #5 தொடர்பு! நாம் பேசும் மொழியை தான், கை ஜாடை, கண் ஜாடை என்பது போல உடல் மொழியும் இருக்கிறது. இது தம்பதிகளுக்கு தெரிந்த விஷயம். இந்த உடல் மொழிக்கு ஓர் சக்தி உள்ளது. இதை தம்பதிகள் இழந்துவிட கூடாது. இந்த உடல் மொழியானது அன்பை, அரவணைப்பை அதிகரிக்க கூடியது. எனவே, இதை வலுப்படுத்தும் தீண்டுதலை கைவிட்டுவிட வேண்டாம்.