உடலுறவில் ஈடுபடுவது ஆணுக்கும் பெண்ணுக்கும் இன்பத்தைக் கொடுப்பது மட்டுமல்ல. அதனால் ஏராளமான உடல் ஆரோக்கியமும் உண்டு. அப்படி தினமும் உடலுறவில் ஈடுபடுவதன் மூலம் உடலுக்குள் என்னவெல்லாம் நடக்கும்?
தினமும் உடலுறவில் ஈடுபட்டால் மனஅழுத்தம் குறையும். உடலுறவின் போது டோபமைன் என்ற வேதிப்பொருள் உடலில் சுரக்கும். இது மன அழுத்தத்தை குறைக்கும் காரணிகளில் மிக முக்கியமானதாகும்.
வாரத்திற்கு மூன்று நாட்கள் ஒவ்வொரு முறையும் 15 நிமிடங்கள் அளவுக்கு உடலுறவு கொள்வது என்பது ஓராண்டில் 75 மைல்கள் ஜாக்கிங் செய்ததற்கு சமம் ஆகும்.
இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். டயஸ்டாலிக் ப்ளட் பிரஷர் எனப்படும் குறைந்த இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும்.
தினமும் உடலுறவு கொள்வது உங்களை இளமையாக வைத்திருக்கும்
அடிக்கடி உடலுறவு கொள்ளும் ஆண்களுக்கு இதய நோய் பாதிப்பு மற்றவர்களை விட 45% குறைவாக உள்ளதாம். மேலும் ஸ்ட்ரோக்கின் பாதிப்பும் குறைவாக உள்ளதாம்
மைக்ரேன் என்னும் ஒற்றைத்தலைவலி உண்டாவது தடுக்கப்படும். தலைவலி, உடல்வலியிலிருந்து நிவாரணம் கிடைக்க வேண்டுமெனில் உடலுறவு கொண்டால் போதும்.
அடிக்கடி உடலுறவு கொள்ளும் ஆண்களுக்கு ப்ரோஸ்டேட் (Prostate) கேன்சர் தாக்கும் அபாயம் இல்லையாம்
தினமும் உடலுறவு கொள்வதினால் பழைய விந்தணுக்குள் வெளியேற்றப்பட்டு, புதிய விந்தணுக்கள் சுரக்கும்.
தினமும் உடலுறவு கொள்வதில் இப்படி ஏராளமான நன்மைகள் உண்டு.