உங்கள் தினசரி செயல்பாடுகளையே வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி அல்லது அதிகப்படுத்தி ஆற்றல் செலவாவதை அதிகரித்து, உடலுக்கு நல்ல உடற்பயிர்சிகளாக மாற்றிக்கொள்ள உதவும் சில குறிப்புகளை இங்கு காணலாம்.
விரைவான சைக்கிள் சவாரிகள் / நடை பயிற்சிகள்: பகல் பொழுதில் எப்போதாவது 10 நிமிடம் நடக்கவும் அல்லது கொஞ்ச தூரம் சைக்கிள் ஓட்டவும்.
உடற்பயிற்சி டிவிடி: காலையிலும் மாலையிலும் சிறிது நேரம் உடற்பயிற்சி டிவிடி போட்டு அதனுடன் சேர்ந்து உடற்பயிற்சி செய்யவும்.
சந்தோஷமாக வேலை செய்யுங்கள்: வீட்டு வேலைகளைச் செய்யும்போது உங்களுக்குப் பிடித்த பாடல்களைக் கேட்டு நடனமாடிக்கொண்டே செய்யலாம்.
மீண்டும் இளமை திரும்பட்டும்: வாரத்திற்கு மூன்று நான்கு முறையாவது உங்கள் குழந்தைகளுடன் ஓடிப்பிடித்து விளையாடுதல், நொண்டி போன்ற விளையாட்டுகளை விளையாடுங்கள்.
இன்னும் பல வேலைகளைச் செய்யுங்கள்: தொட்ட வேலைகள், வீடு துடைத்தல், கார் கழுவுதல் போன்ற கூடுதல் வேலைகளைச் செய்யுங்கள். இதுபோன்ற வேலைகளை வாரம் ஒருமுறையேனும் செய்ய முயற்சி செய்யுங்கள்.
வீட்டை சுத்தம் செய்து அடுக்கி, அழகுபடுத்துங்கள்: வாரம் ஒரு முறையேனும் சமையலறை, குளியலறை தரையை நன்றாகத் தேய்த்துக் கழுவி சுத்தம் செய்யுங்கள்.
விளையாட்டுகளை மறந்துவிட வேண்டாம்: ஃப்ரிஸ்பீ, நொண்டி விளையாட்டு, கயிறு தாண்டுதல் போன்ற விளையாட்டுகளை விளையாடுங்கள்.
எல்லாவற்றையும் சுத்தம் செய்து பளபளவென்று வைத்துக்கொள்ளுங்கள்: வீடு முழுவதும் தூசி துடைக்கலாம், எலக்ட்ரானிக் பொருள்களைச் சுத்தம் செய்யலாம், ஷோ கேசை அடுக்கி வைக்கலாம். இவையும் நல்ல உடற்பயிற்சிகளே.
கடைக்குச்: செல்லும்போது காரிலோ மோட்டார் சைக்கிளிலோ செல்லாமல் நடந்து செல்லுங்கள்.
நாய் வளர்த்தல்: உங்கள் செல்ல நாயுடன் தினமும் வாக்கிங் போகலாம்.