தினசரி உடலுறவு கொள்வதால் விந்தணுக்களின் திறன் குறையுமா என்ற கேள்வி அனைவரின் முக்கிய கேள்வியாகும். தினசரி உடலுறவு வைத்துக் கொள்வது என்பது ஆரோக்கியமானது தான். இவ்வாறு உடலுறவு வைத்துக் கொள்வது என்பது உங்களுக்கு கருவுறுதல் பிரச்சனை இல்லை என்றால் உங்களது விந்தணுக்களை பாதிக்காது. பல ஆய்வுகள் தினசரி உடலுறவு வைத்துக் கொள்வதால், விந்தணுக்களின் திறன் மேம்படுத்தப்படுகிறது என்று கூறுகின்றன. குறைவான விந்தணுக்களை கொண்டுள்ளவர்களுக்கு தினசரி உடலுறவு கொண்டால் கருவுறுவதற்கான வாய்ப்புகள் குறையும் என்று நம்பப்படுகிறது. இந்த பகுதியில் ஆண்களின் விந்தணுக்களை பாதிக்கும் சில பழக்கங்களை பற்றி காணலாம்.
குறைவான விந்தணுக்கள் நீங்கள் குழந்தைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கும் போது, குறைவான விந்தணுக்கள் தான் உள்ளது என்று மருத்துவர் தெரிவித்துவிட்டால் நீங்கள் தினசரி உடலுறவு கொள்வது என்பது கருவுறுவதை தமாதமாக்கும். ஒவ்வொரு முறையு ஆணின் விந்தணுக்கள் வெளியேறுவதால், அவரது உடலில் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைகிறது. எனவே இது மீண்டும் அதிகரிக்க சில காலம் தேவைப்படுகிறது.
விந்தணு உருவாகும் காலம் விந்தணுக்கள் உருவாக எடுத்துக் கொள்ளும் காலம் என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபாடும். இது மீண்டும் உருவாக 24 முதல் 48 மணி நேரங்கள் எடுத்துக் கொள்ளும். எனவே 36 மணிநேர இடைவெளியில் உடலுறவு கொள்வது என்பது கரு உருவாக வழிவகுக்கும்.
இது வேண்டாம்! உங்களுக்கு குறைவான அளவு மட்டுமே விந்தணுக்கள் இருப்பது தெரிய வந்தால், நீங்கள் தொடர்ச்சியாக உடலுறவு கொள்வதை நிறுத்திக் கொள்ளலாம்.
கால இடைவெளி இது பற்றி நடந்த ஆராய்ச்சிகளில் ஆண்கள் தினசரி ஒரு மாதம் காலம் உடலுறவு கொள்வதால் அவர்களது விந்தணுக்களின் திறனும், டி.என்.ஏக்களும் முழுமை பெருவதில்லையாம். அதுவே மூன்று அல்லது ஐந்து நாட்களுக்கு இடைப்பட்ட கால இடைவெளிகளில் உடலுறவு கொள்வதால் அவர்களது விந்தணுக்களின் திறனில் எந்த விதமான மாற்றமும் இல்லையாம்.
இவர்களுக்கு மட்டும் தான் தினசரி உடலுறவு விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைக்கும் என்பது, விந்தணுக்கள் குறைவாக உள்ளவர்களுக்கு மட்டும் தான். மற்றவர்களுக்கு தினசரி உடலுறவு ஆரோக்கியமானது தான். விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளவர்கள், மாதவிடாய் நெருங்கும் காலங்களில் உடலுறவு கொள்வது கருவுற வழிவகுக்கும்.