சச்சின் படத்தில் ஒரு காட்சிக்கும் பாட்டுக்கும் வந்த பிபாசு பாசுவை நினைவு இருக்கிறதா? எப்படி மறக்க முடியும்? ஹீரோவுடன் நடுரோட்டில் கண்டபடி உருளுவாரே! இவரை சாதாரணமாக எடைபோட்டு விடாதீர்கள். இவரை பற்றி இப்போது ஒரு ஹா ட் நியூஸ் வைரலாகி வருகிறது.
பாலிவுட்டில் இவருக்கு மவுசு அதிகம். பெரும்பாலும் இவர் க் ளாமர் கதாபாத்திரத்திற்கே முக்கியத்தும் கொடுப்பாராம். அப்படிதான் இவர் சமீபத்தில் தனது கணவருடன் ஒரு சூடேற்றும் வெப் சீரியசில் நடித்துள்ளார்.
அதற்கு வரவேற்பும் அமோகமாக இருந்துள்ளது. உடனே இணையத்தில் அந்த வெப் சீரியஸை தேட சென்று விடாதீர்கள். நானே சொல்கிறேன்! டே ஞ்சரஸ் எனும் அந்த வெப் சீரியசின் ட்ரெய்லர் வெளியானதுமே அது பெரும் ச ர்ச்சையை கிளப்பியுள்ளது.
இப்போது ஏன் இவரை பற்றி பேசுகிறீர்கள் என கேட்கிறீர்களா? விஷயம் இருக்கு! தனது திரை பயணத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவம் குறித்து இப்போது ஓப்பனாக பேசியுள்ளார் பிபாசு பாசு. தயாரிப்பாளர் ஒருவர் தன்னிடம் எவ்வளவு கொடூரமாக நடந்து கொண்டார் என்பதை கூறியுள்ளார்.
ஒரு தயாரிப்பாளர் வாய்ப்பு தருவதாக கூறி, பிபாசு பாசுவின் வீட்டு முகவரியை வாங்கியுள்ளார். இவரும் நம்பி கொடுத்துள்ளார். திடீரென ஒருநாள் அந்த நபர் தன் வீட்டிற்கு வந்ததும் உடனே தனது வீட்டை சுற்றி நோட்டம் விட்டு கொண்டே, மெல்ல மெல்ல வீட்டினுள் சென்றவர் படுக்கையறையில் நுழைந்ததாகவும் பின்னர் தனது கையை வசமாக பிடித்து கொண்டு படுக்கையில் தள்ளி தன் மீது அமர்ந்து தன்னை துன்புறுத்தியதாகவும் கூறியுள்ளார். பின்னர் பிபாசு சத்தம் போடவே அந்த நபர் அந்த இடத்தை விடுத்து சென்றதாகவும் கூறியுள்ளார்.
பெண்கள் வாய்ப்பு தேடி அலைவதை சில பேர்வழிகள் தனக்கான வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ள முற்படுவதால் தான் இன்னும் பல பெற்றோர்கள் சினிமா ஆசை என்றாலே பெண் குழந்தையை வெளியே அனுப்ப தயங்குகிறார்கள்.