Home பெண்கள் தாய்மை நலம் தாய்ப்பால் கொடுக்கும் காலங்களில் கார உணவுகளை தவிர்ப்பது நல்லது

தாய்ப்பால் கொடுக்கும் காலங்களில் கார உணவுகளை தவிர்ப்பது நல்லது

24

d3397a1c-b873-426f-87da-238bb82217cd_S_secvpfவெங்காயம், மிளகாய் மற்றும் மிளகு போன்ற காரமான உணவுப் பொருட்களை அதிகம் சாப்பிட்டால், குழந்தையின் வயிற்றிற்கு உப்பு

சத்தை ஏற்படுத்தும். மேலும் சில நேரங்களில் வயிற்று வலி, வயிற்றுப் போக்கு அல்லது வாந்தி போன்றவற்றை கூட ஏற்பட நேரிடும்.

ஏனெனில் குழந்தையின் செரிமான மண்டலமானது மிகவும் சென்சிட்டிவானது. ஆகவே இத்தகைய காரமான பொருட்களை அவர்களது

உடல் ஏற்றக் கொள்ளாது.

பிரசவத்திற்கு பின் பெண்கள் உடலை தேற்றுவதற்கு நன்கு காய்கறிகளை சாப்பிட வேண்டியது தான். ஆனால் அவற்றில் முட்டை

கோஸ், காலி ஃப்ளவர், ப்ராக்கோலி மற்றும் வெள்ளரிக்காய் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

ஏனெனில் இந்த உணவுப் பொருட்கள்

குழந்தைகளுக்கு வாயுத் தொல்லையை ஏற்படுத்தும்.

தாய்ப்பால் கொடுக்கும் போது அதிகமான அளவில் தாயானவள் பால் பொருட்களை சாப்பிட்டால், அவை குழந்தைக்கு பெருங்குடலில்

பெரும் வலி ஏற்படும். ஆகவே அந்த பால் பொருட்களை அதிக அளவில் சாப்பிடாமல் இருப்பது நல்லது.

மீன்களில் கானாங்கெளுத்தி, ஸ்வார்டுபிஷ், டைல் ஃபிஷ் மற்றும் சுறா போன்றவற்றை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவற்றில் அதிக

அளவில் மெர்குரி உள்ளது. இது குழந்தைக்கு மிகவும் பாதிப்பானது. ஆகவே மெர்குரியின் குறைவாக உள்ள மீன்களான டூனா, கெளுத்தி,

சாலமன் மற்றும் பலமீன்களை குறைந்தளவில் சாப்பிடலாம்.

காப்பியை குறைந்த அளவில் குடிக்க வேண்டும். ஏனெனில் அவை குழந்தையின் தூக்கத்தை கெடுக்கும். அதுமட்டுமின்றி, குழந்தைக்கு

ஒருவித நடுக்கம் மற்றும் உடலில் எரிச்சலை உண்டாக்கும்.

சாக்லேட்டிரலும் காப்ஃபைன் உள்ளது. இவற்றை அதிகம் சாப்பிட்டால், தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு வாயுத் தொல்லையை

உண்டாக்கும். எனவே குறைந்தளவில் சாப்பிடுவது நல்லது.