குழந்தையின் முதல் உணவு தாய்ப்பால். ஆறுமாதம் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் தரவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இருப்பினும் ஒரு சில தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பது குறைந்து 6 மாதங்களுக்கு வற்றிவிடும். எனவே குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பது பாதிக்கப்படும். எனவே தாய்ப்பாலுக்கு இணையான சில உணவுகளை குழந்தை நல மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். அவற்றை பின்பற்றி பாருங்களேன்.
பசுவின் பால்
தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு பசுவின் பால் மிகச்சிறந்த இணை உணவாகும். பாட்டிலில் ஊற்றி கொடுக்கலாம். இதனால் குழந்தைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்தும், கொழுப்புச் சத்தும் கிடைக்கும்.
சோயாபால்
ஒரு சில குழந்தைகளுக்கு பசுவின் பால் ஒத்துக்கொள்ளாது. அவர்களுக்கு சோயா பால் தரலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இதில் உள்ள உயர்தர புரதச் சத்து குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஏற்றது.
அரிசிப் பால்
அரிசியில் உயர்தர கார்போஹைடிரேட், கால்சியம், புரதச்சத்துக்கள் காணப்படுகின்றன. குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின், கொழுப்புச்சத்துக்களும் இதில் காணப்படுகின்றன. அரசியில் இருந்து பால் தயாரிப்பது எளிதானது. சிறிதளவு அரிசியை எடுத்து மூன்று மணிநேரம் ஊறவைத்து நன்றாக அரைத்து தண்ணீரில் கலந்து வடிகட்டவும். இதேபோல் வடித்த கஞ்சியும் கூட குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
பாதாம்பால்
பாதாமில் உயர்தர கொழுப்பு, புரதம் உள்ளது. இது வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது. உலர்ந்த பாதம் பருப்பில் மெக்னீசியம், கால்சியம் சத்துக்கள் வளரும் குழந்தைகளுக்கும். இதய ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. இது பசுவின் பாலிற்கு இணையான சத்துக்களை கொண்டுள்ளது. பாதாம் பருப்பில் இருந்து பால் தயாரிப்பது எளிதானது. பருப்பை நன்றாக ஊறவைத்து தோலை நீக்கியபின்னர் நன்றாக மைய அரைக்க வேண்டும். அதை காய்ச்சி வடிகட்டிய நீரில் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
இவை தாய்பால் வற்றிப்போன தாய்மார்களுக்கான ஆலோசனைதான். தாய்பால் இருக்கும் போது எந்த சூழ்நிலையிலும் வேறு பால், உணவு கொடுக்கக்கூடாது என்பதே மருத்துவர்களின் ஆலோசனை. தாய்பால் வற்றிப் போன பின்னர் குழந்தைகளுக்கு சரிவிகித உணவு கிடைக்க வேண்டும் என்று நினைக்கும் பட்சத்தில் மேற்கண்ட பாலை கொடுக்கலாம் என்பதே மருத்துவர்களின் பரிந்துரையாகும்.