Home பெண்கள் தாய்மை நலம் தாய்பால் தருவதை நிறுத்துவதும் – அதற்கான முயற்சிகளும்

தாய்பால் தருவதை நிறுத்துவதும் – அதற்கான முயற்சிகளும்

34

Captureதாயான பின்பு தன் குழந்தைக்கு எத்தனை வயது வரை தாய்ப்பால் தருவது? தாய்பாலை எப்படி மறக்கடிக்கச்செய்வது என பல் கேள்விகளுக்கு பதில் தெரியாமல் தாய்மார்கள் தவிக்கிறார்கள்.

குழந்தைக்கு தாய்பால் தருவது மிகவும் அவசியமானது. அலுவலக பணிக்கு செல்பவர்களுக்கு வசதியாக இன்றுபாலை பீய்ச்சி எடுக்க வசதியான கருவிகள் சுட வந்துள்ளன. எனவே குழந்தைக்கு தாய்பாலை உடனே கூட நிறுத்திவிட வேண்டிய அவசியமும் ஏற்படாது.

ஆயினும் சுற்றியிருப்பவர்கள் ஆறுமாதம் ஆகிவிட்டதா போதும் பால் தருவதை விடு என கூறிவிடுவர். ஆனால் குழந்தை அப்போது தான் தீவிரமாய் பால் குடி மறப்போனா? பார் என்ற சப்தமிட்டு சலனப்படுத்தும். எப்படி இருப்பினும் குழந்தைக்கு தாய்பால் தருவதும் அதனை நிறுத்துவதும் தாயிடம் தான் உள்ளது.

தாய்பால் நிறுத்தவேண்டிய காலம் :

குழந்தை ஆறு மாதத்திற்கு பின் சிறுசிறு உணவுகள் எடுத்து கொண்டாலும் உடனே தாய்பாலை நிறுத்த வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் இதர உணவுடன் தாய்பாலும் ஓர் அவசியமான உணவே. மேலும் உலக சுகாதார நிறுவனம் இரண்டு வயது வரை கூட குழந்தைக்கு தாய்பால் தரலாம் என ஆலோசனை கூறியுள்ளது.

சில தாய்மார்கள் குழந்தை தான் நடக்க ஆரம்பித்துவிட்டதே ஏன் இன்னும் தாய்பால் தரவேண்டும் என்று நினைப்பார்கள். அது தவறு.

குழந்தை விருப்பத்திற்கு ஏற்ப அது மறக்கும் நிலை ஏற்படும் வரை தாய்பால் தரலாம். அதனால் தாய்க்கும் குழந்தைக்கும் ஏதும் பிரச்சனை இல்லை என்றால் போதும். குழந்தையை வெறுப்பேற்றும் வகையில் தாய்பாலை சட்டென நிறுத்திவிட்டு வேறு உணவுகளை ஊட்டுவதற்கு மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும். மேலும் குழந்தை அதனை மனதில் வைத்து வேறு உணவுகளை உண்பதை தவிர்ப்பது, அதனை தள்ளுவது போன்ற விஷயங்களை மேற்கொள்ளும்.

எனவே தாய்பால் குடிப்பதை படிப்படியாக குறைக்க பார்க்க வேண்டும். குழந்தைக்கு பிடித்த வேறு ஆகாரங்களை அதிகப்படுத்திய பிறகே பால் கொடுப்பதை அதற்கேற்ப குறைத்திட வேண்டும். பால் தரும் நேர இடைவெளியை அதிகரித்திட வேண்டும். பிறகு பகல் நேரத்தில் பால் கொடுப்பதை பெரும்பாலும் குறைத்திட வேண்டும். குழந்தையின் மனநிலைக்கு ஏற்றபடி இதனை படிப்படியாக செய்திடல் வேண்டும்.

தாய்பால் தந்து கொண்டிருந்தால் எப்படி பணிக்கு செல்வது?

குழந்தைக்கு பிடித்தமான பாட்டிலில் தாய்பாலை சேகரித்து வைத்து தரலாம். மேலும் பொதுஇடத்தில் தாய்பால் தருவது கடினமாக உள்ளது என்று நினைத்தால் பகல் நேரத்தில் பால் தருவதை படிப்படியாக குறைத்து இரவு நேரங்களில் தாய்பால் கொடுக்கலாம்.

குழந்தை ஓரளவிற்கு தாய்பால் இன்றி தன் பணிகளை மேற்கொள்கிறது என நினைக்கும் போது தாய்பால் கொடுப்பதை நிறுத்திவிடலாம்.

உடனே மாத்திரை ஏதும் எடுத்திட வேண்டாம். இயற்கையாகவே சில உணவுகளை உண்ணும்போது பால்சுரப்பது குறைத்து விடும்.

புரோட்டின் சார்ந்த உணவுகளை குறைப்பதன் மூலம் பால் சுரப்பது குறைந்து விடும். திடீரென பால் தருவதை நிறுத்தும் போது தாய்மார்களுக்கு சில ஹார்மோன் பிரச்சனைகள் கூட ஏற்படலாம். எனவே உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் குழந்தையின் மனநிலைக்கு ஏற்ப யோசித்து செயல்பட வேண்டும்.

குழந்தையின் வளர்ச்சிக்கும் மனநிலைக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு தாய்பால் நிறுத்துவது அமைவது அவசியம்.