Home அந்தரங்கம் தாம்பத்யத்திலும் தன்னம்பிக்கை வேண்டும்

தாம்பத்யத்திலும் தன்னம்பிக்கை வேண்டும்

38

எந்த ஒரு விசயத்திற்கும் தன்னம்பிக்கை வேண்டும். நம்பிக்கையில்லாமல் தொடங்கும் விசயம் வெற்றியடையாது என்கின்றனர் நிபுணர்கள். அதுபோலத்தான் தாம்பத்யத்தையும் தன்னம்பிக்கையோடு அணுகவேண்டும் என்கின்றனர் உளவியலாளர்கள். வெற்றிகரமான இல்லற வாழ்க்கைக்கு அவர்கள் கூறும் ஆலோசனைகளை கேளுங்களேன்.

பயத்தை விட்டொழியுங்கள்
படுக்கையறையில் பயத்துக்கு எந்த வேலையும் இருக்கக் கூடாது. ஒரு கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ படுக்கையறை என்பது பயங்களின் கூடாரமாக இருந்தால் தாம்பத்ய சுகம் பெறுவதில் சிக்கல் ஏற்படும்.தேவையில்லாத பயத்தை விட்டொழியுங்கள். உங்கள் தன்னம்பிக்கைதான் தாம்பத்யத்தில் உங்களை வெற்றிகரமானவராக செயல்பட வைக்கும். எனவே படுக்கையறைக்கு பாம்பு, பூதம், எதுவும் இல்லை. எனவே தேவையற்ற பயத்தை விட்டுவிட்டு தன்னம்பிக்கையுடன் தொடங்குங்கள் வெற்றிகரமான வாழ்க்கை கிடைக்கும்.

சந்தோசமான சிரிப்பு
படுக்கையறையில் நுழையும் போதே புன்னகையுடன் இருங்கள். முடிந்த அளவு மகிழ்ச்சியோடு சிரியுங்கள். தாம்பத்யம் என்பது மகிழ்ச்சிகரமானதுதானே. அங்கே எதற்கு சோகமும், கவலையும். எனவே சந்தோசமாக சிரியுங்கள். சிரிப்பே உங்கள் இருவரின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
சின்ன சின்ன விளையாட்டு
படுக்கையறையில் நீங்கள் விளையாடும் சின்ன சின்ன விளையாட்டுக்கள் உங்களின் உற்சாகத்தை அதிகரிக்கும். விளையாட்டுக்களின் மூலம் உங்கள் உணர்வுகள் கிளர்ச்சியடையும் என்கின்றனர் நிபுணர்கள். இதன் மூலம் தன்னம்பிக்கையோடு தாம்பத்ய வாழ்க்கையை தொடரலாம்.

அமைதி அவசியம்
படுக்கையறையில் எப்போதும் பூரண அமைதி நிலவ வேண்டும். படுக்கையறை தூய்மையின் இருப்பிடமாக தாம்பத்திய உறவும், ஆரோக்கியம் ததும்புவதாகவும், மிகுந்த பாதுகாப்பு கொண்டதாகவும் அமைந்திருக்க வேண்டும். புழுக்கமும் வியர்வையும் நங்கூரம் போடும் இடமாக இருக்கக் கூடாது. காற்றுக்கு எந்த பஞ்சமும் இருக்கக் கூடாது.

உற்சாகமாக தொடங்குங்கள்
கணவன் மனைவி இருவரும் இன்பம் பொங்க இணைவதற்கு இரண்டு பேரும் ஒருவரையருவர் தாம்பத்திய உறவில் விரும்பி ஏற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு கணவன் மனைவி இருவரும் ஒருவரையருவர் விரும்பி ஏற்றுக் கொள்வதில் எந்த சிக்கல்களும். இருக்கக் கூடாது. சுத்தமின்மை, வழியும் வியர்வை, உடல் துர்நாற்றம், எரிச்சலூட்டும் வியர்க்குரு, நெருங்கவே முடியாமல் செய்யும் வாய் துர்நாற்றம் ஆகியவை இல்லற சுகத்தை பாதிக்கும். பெண்கள் கஸ்தூரி மஞ்சள், கடலை மாவு, வால்மிளகு சேர்த்து அரைத்த குளியல் பொடியை பயன்படுத்தி தங்களை சுகாதாரமாக வைத்துக் கொள்ளலாம்.
கணவனோ மனைவியோ தங்களுக்கு தோல் நோய்கள் இருந்தால் அதற்கு அம்மான் பச்சரிசி, மஞ்சள், வேப்பிலை, துளசி இலை போன்றவற்றை மைய அரைத்து உடம்பு பூராவும் பூசி வைத்து அரை மணி நேரம் கழித்து குளிக்கலாம்.

சிகரெட் புகைப்பவர்கள். மதுப் பழக்கம் உள்ளவர்கள் மேல் எப்போதும் ஒரு வித வாசனை வீசும். இது போன்ற பழக்கம் உள்ளவர்கள் படுக்கையறைக்குள் நுழையும் போது தங்கள் மேல் நாற்றம் அடிக்காமல் இருக்க ஒரு குளியலைப் போட்டு விட்டு நுழைவது நல்லது.

மணக்கும் மலர்கள்
நமது படுக்கையறையை தங்கமும் வைரமும் வைத்து இழைத்து வைத்திருக்க வாய்ப்பில்லை. நம்மால் எளிதில் வாங்கி சூடிக் கொள்ள முடிகிற பூக்களைக் கொண்டே நமது படுக்கையறையை கமகமக்க வைக்கலாமே. பூக்களின் நறுமணமே உற்சாகத்தையும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

பகிர்ந்து கொள்ளுங்கள்
கணவனோ மனைவியோ தாம்பத்தியத்தில் தங்களுக்கு ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள். இது உங்கள் மீதான தேவையற்ற அச்சத்தை விலக்க உதவும். இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்துகொள்ளுங்கள். தாம்பத்யம் குறித்த பயம் விலகும்.