கர்ப்பமான முதல் 3 மாத காலத்துக்கு ‘மார்னிங் சிக்னெஸ்’ எனப்படும் மசக்கை பிரச்சனை சில பெண்களுக்கு இருக்கும். காலையில் எழுந்ததும் குமட்டல், சிடுசிடுப்பான மனநிலை, உடல் சோர்வு காணப்படும்… அதனால் உடலுறவில் ஆர்வம் குறைவாக இருக்கும். டாக்டரிடம் போனால் உடல் நிலையை ஆராய்ந்து காரணத்தைச் சொல்லிவிடுவார்.
குறைப்பிரசவமாகும் வாய்ப்பு உள்ளவர்கள், ஏற்கனவே கருக்கலைப்பு ஆனவர்கள், ‘ஸ்பாட்டிங்’ எனப்படும் உதிரப்போக்கு உள்ளவர்கள், ‘செர்விக்ஸ்’ எனப்படும் கர்ப்பப்பை கோளாறு உள்ளவர்கள், எடை குறைவாக இருப்பவர்கள், ‘பிளாசென்டா பிரிவியா’ பிரச்சனை உள்ளவர்கள், உதிரப்போக்கு அதிகம் உள்ளவர்கள் ஆகியோர் கர்ப்பமான பின் கலவியில் ஈடுபடக் கூடாது.
கணவருக்கு பிறப்புறுப்பில் கிருமி ஏதாவது இருந்தாலும் கலவி கூடாது. இந்தப் பிரச்சனைகள் எதுவும் இல்லாதவர்கள் கர்ப்ப காலத்தின் 9வது மாதம் வரை உறவில் ஈடுபடலாம். வாழ்க்கைக்கு கர்ப்பம் தடையல்ல. தம்பதி விரும்பினால் தாராளமாக ஈடுபடலாம். சந்தேகங்கள் எழுந்தால் மருத்துவரிடம் கேட்டு சரி செய்து கொள்ளலாம்… தவறில்லை!