Home ஜல்சா தள்ளாடும் வயதிலும் தா ம்பத்திய சு கத்துக்காகவா இந்த விளம்பரங்கள்? உ டலு றவோடு முடிவதில்லை!...

தள்ளாடும் வயதிலும் தா ம்பத்திய சு கத்துக்காகவா இந்த விளம்பரங்கள்? உ டலு றவோடு முடிவதில்லை! பார்த்தவுடன் பல்ல காட்டி சிரிச்சவங்க இதுக்கு என்ன சொல்லப்போறீங்க?

1497

பேப்பர் படிக்கும்போது, வேலை வாய்ப்பு, ரி யல் எஸ்டேட் விளம்பரங்கள், திருமண வரன்கள் குறித்து விளம்பர பகுதியில் ஒரு அலசல் அலசுவது வழக்கம். அப்படித்தான் திருமண வரன் பகுதி பார்த்துக்கொண்டிருக்கும்போது, எப்படிப்பட்ட பெண்கள் வேண்டும் என்பது குறித்த ஒரு வேண்டுதல் இருக்கும் அல்லவா? அதை படிக்கும் போது கட்டுப்படுத்த முடியாத சிரிப்பு வந்துவிட்டது. ஜா தி சங்கங்களில், உறவினர்களிடத்தில், ப்ரோக்கர்களிடத்தில் என எல்லோரிடத்தும் சொல்லிவைத்து பெண் கிடைக்காமல் போகவே, பேப்பரில் விளம்பரம் கொடுக்கும் நிலைக்கு செல்கிறார்கள்.

அப்படி இருக்க எப்படிபட்ட பெண் வேண்டும் என்பதை மாப்பிள்ளை வீட்டார் விளக்கியுள்ளதை பார்த்த போது சிரிப்பு வந்துவிட்டது. நீளமான, அடர்த்தியான கூந்தல், நல்ல சி வப்பான, படித்த, வேலையில் உள்ள பெண் வேண்டுமாம். விளம்பரத்தின் ஓரிடத்தில் கூட, ஒரு ஃபார்மால்டிக்கு குணவதியான பெண் அவசியம் என குறிப்பிடவில்லை.

அப்படியே பேப்பரை புரட்டும் போது மற்றொரு விளம்பரம் மிகவும் ஈர்த்தது. ஐம்பது, அறுபது வயதானவர்கள் துணை வேண்டுமென விளம்பரம் செய்துள்ளார்கள். இதெல்லாம் உண்மையா என வியந்தபடி, நண்பரிடம் பேப்பரை காட்டிய போது, சிரிக்க ஆரம்பித்துவிட்டார். ஆனால் எனக்கு இந்த விளம்பரம் ஒருவித ப யத்தை உண்டாக்கியது. ஏனெனில் நான் திருமணம் வேண்டாம் என ஒதுக்கிவைத்துவிட்டு, வாழ்க்கையை எ ன்ஜாய் செய்ய வேண்டுமென்ற ம னப்பாங்கில் உள்ளவன்.

விளம்பரம் கொடுத்துள்ளவர்கள் எல்லாமே நல்ல வசதி படைத்தவர்கள், லட்சத்தில் ஊதியம், கோடியில் சொத்து என வசதிக்கு ஒரு குறைச்சல் இல்லை. இருப்பினும் அன்புக்கு? அவர்களுக்கு உள்ள வசதிக்கு நினைத்தால், வீட்டோடு ஒன்றிக்கு இரண்டு வேலை ஆட்களை வைத்துக்கொள்ள முடியும். ஆனால் இந்த வயதிலும் துணையை தேடுகிறார்கள்.

ஏற்கனவே ஒரு துணை இருக்கும்போது, க ள்ளக்காதல் என இன்னொரு துணையை தேடும் இந்த உலகத்தில், பேச்சு துணைக்கு கூட ஆளில்லாமல் தவித்துக்கொண்டிருக்கும் முதியவர்கள் பொதுவெளியில் துணை தேடினால் தவறா? அறுபது வயதில் இவர்களுக்கு என்ன உ டல் தேவையா இருக்க போகிறது? தள்ளாடும் வயதில் தாங்கி நிற்க ஒரு தோளை எதிர்பார்த்து தான் இந்த விளம்பரம்.

டிவி விளம்பரம் ஒன்றில் கூட பாட்டி ஒருவர் தன்னுடைய மகன், மகள், பேர குழந்தைகளை எல்லாம் அழைத்து உங்களுக்கெல்லாம் ஒரு புதிய நபரை அறிமுகப்படுத்தப்போகிறேன் என ஒரு தாத்தாவை அறிமுகம் செய்வார். அந்த தாத்தா யாரென்றால் பாட்டியின் புதுத்துணை. இந்த பாட்டி தன்னுடைய விரலை காட்டி இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டோம் என சொல்வார்.

மகன், மகள், மருமகன் எல்லோரும் அ திர்ச்சியடைந்து பார்ப்பார்கள். இந்த விளம்பரங்கள் உணர்த்தும் ஆழமான கருத்துக்கள், கல்யாணம் என்பது உ டலு றவோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. அதனை தாண்டிய அன்பு உள்ளது. வாழ்வில் எல்லோரும் ஒருவரை ஒருவர் சார்ந்து தான் வாழவேண்டும் என்பதை ஆழமாக உணர்த்திவிட்டது இந்த விளம்பரங்கள்.