முடி உதிர்வை தடுத்து, முடியின் அடர்த்தியாக அதிகப்படுத்தி, நன்றாக வளரச் செய்ய இயற்கையில் உள்ள அற்புதமான வழி இதோ!
தேவையான பொருட்கள்
விளக்கெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
முட்டையின் மஞ்சள் கரு – 2 டேபிள் ஸ்பூன்
சோற்றுக் கற்றாழை ஜூஸ் – 1 டேபிள் ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
இந்த விளக்கெண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு மற்றும் சோற்றுக் கற்றாழை சாறு ஆகிய மூன்றையும் நன்றாக கலந்து முடியின் ஸ்கால்ப்பிலும், கூந்தலிலும் தடவ வேண்டும்.
அதன் பின் அரை மணி நேரம் கழித்து, குளிர்ந்த நீரில், தரமான ஷாம்பு அல்லது சீகைக்காய் கொண்டு குளிக்க வேண்டும்.
இதை வாரம் இரண்டு முறை செய்து வந்தால், கூந்தல் உதிர்வது நின்று, அடர்த்தியாக முடி வளர ஆரம்பிக்கும்.
நன்மைகள்
விளக்கெண்ணெய் உடலுக்கு குளிர்ச்சி அளிப்பதுடன், முடியை கருமையாகவும், அடர்த்தியாகவும் வளர உதவுகிறது.
முட்டையின் மஞ்சள் கரு முடி உதிர்தலை கட்டுப்படுத்தும் கண்டிஷனராக செயல்படுவதுடன், வெளிப்புற மாசிலிருந்து கூந்தலை பாதுகாக்கிறது.
சோற்றுக் கற்றாழை அருமையான பலன்களை கூந்தலுக்கு அளிக்கிறது. மேலும் இது கூந்தலை மென்மையாக்கி, முடியின் வறட்சியை போக்கி, ஈரப்பதம் அளித்து, கூந்தலை பளபளப்பாக்க உதவுகிறது.
விளக்கெண்ணெய், சோற்றுக் கற்றாழை மற்றும் முட்டையின் மஞ்சள் கரு ஆகிய மூன்றிலுமே அதிகப்படியான மினரல் விட்டமின் மற்றும் அமினோ அமிலங்கள் உள்ளதால், இது கூந்தலின் வளர்ச்சியை தூண்ட உதவுகிறது.