Home பாலியல் தம்பதிகளுக்கான அந்தரங்க இடமான‌ படுக்கையறையில் சில ஏக்கங்களும் சில எதிர்பார்ப்புகளும்!

தம்பதிகளுக்கான அந்தரங்க இடமான‌ படுக்கையறையில் சில ஏக்கங்களும் சில எதிர்பார்ப்புகளும்!

29

images (1)தம்பதிகளுக்கான அந்தரங்க இடமான‌ படுக்கையறையில் சில ஏக்கங்களும் எதிர்பார்ப்பு களும்!
மனிதனின் நிம்மதி ஸ்தலம் படு க்கையறை. எல்லா இடங்க ளைம் போல படுக்கையறைக் கும் என்று சில நாகரீக நடைமுறைகள் இருக்கின்றன. அவற்றை பின்பற்றாவிட்டால், துணைவருக்கோ அல்லது
அருகில் படுப்போ ருக்கோ தொந்தரவாகி விடக் கூடு ம் .
படுக்கையறை, உங்களுட ன் படுப்பவருக்குத் தொந்த ரவு அறையாக மாறாமல் இருப்பதற்கு பின்பற்ற வேண்டிய நாகரீக நடைமுறைகள் சிலவற் றை பார்க்கலாம்…
அணைப்பு
படுக்கையறை என்றாலே தனிமை என்று அர்த்தம். பல தம்பதிகளுக்குத் தனிமை வாய்ப்பது படுக்கைய றையில் மட்டும்தான். அந்த நேரத்தில் உங்களின் அன்பை வெளிபடுத்தும் விதத்தில் மென்மை யாக அணைப்பது தவறில்லை. பெரும்பாலான ஆண்கள் `உறவு’ க்கு பின் உடனே தூங்கி போகிறார் கள் என்கின்றன ஆய்வுக ள். மாறாக பெண்களோ அன்பான அரவணைப்பை எதிர்பா ர்க்கிறார்கள்.
தூங்குவதற்கு முன் துணையுடன் சிறிதுநேரம் அன்போடு உறவாடுங்கள், உரையாடுங்க ள். சிறிது நேரத்துக்குபின் இருவரும் இய ற்கையாகவே விலகித் தூங்க ஆரம்பித்துவிடுவீர்கள். இல்லாவிட் டால், `தூங்கலாம்னு நினைக்கிறே ன்’ என்று வெளிப்படையாகக் கூறி விட்டுத்தூங்க ஆரம்பிங்கள். அதற்கு முன், அன் பான புன்னகைடன்கூடிய ` குட் நைட்’ அருமையாக இருக்கும் .
புரளுவது, குறட்டை விடுவது
துணையில் ஒருவர் இன்னும் தூக்க ம் வராமல் அல்லது அரை குறைத் தூக்கத்தில் இருக்கலாம். அடுத்தவ ரோ ஆழ்ந்த உறக்கத்தில் குறட்டை விடலாம், கன்னாபின்னாவென்று உ ருண்டு அடுத்தவரை கட்டிலில் இரு ந்தே தள்ளிவிட்டுவிடலாம். விளைவு : ஒருவருக்குத் நிம்மதியில்லாத உறக்கம், காலையில் கிறக்கம்.
இதற்குத் தீர்வு என்ன? கடுமையாகக் குறட்டை விடுபவர்கள் முக்கு பட்டை போன்றவற்றை அணி ந்துகொள்ளலாம். காது முக்கு , தொண்டை நிபுணரை பார்க்க லாம். `பாதிக்கப்படுபவர்’ காது அடைப்பா ன் மாதிரியானதை உபயோகிக்கலாம். மெலிதாக மெல்லிசையை ஒலிக்க விட லாம். துணையிடம் நீங்கள் ரொம்ப சத்தமாகக் குறட்டை விடுகிறீர் கள் என்று சத்தம் போடாமல் எடுத்துக் கூறலாம். கடுமையாக உரு ண்டு புரண்டு படுப்பவர்களிடம் இரு ந்து தப்பிப்பதற் கான ஒரே தீர்வு, படு க்கை அளவை அதிகரிப்பதுதான்.
நேரம் கடந்த தூக்கம்
உங்களுக்கு இரவு 10 மணிக்கெல் லாம் படுத்து காலை 5 மணிக்கு ` டான்’ என்று எழ வேண்டும். ஆனால் உங்கள் துணைக்கோ நள்ளிரவு தாண்டினால்தான் தூக்கம் இலே சாகக் கண்ணை விசாரிக் கும். இதற்கு என்ன செய்வது? `விளக்கு அணைக்கும் கொள்கை’ என்ற ஒன் றைக் கொண்டு வாருங்கள். இருவரில் ஒருவர் தூங்கிய பிறகு அடுத்தவர் அடுத்த அரைமணி அல்ல து முக்கால் மணிநேரத்துக்கு புத்த கம் படிக்கலாம், டிவி பார்க்கலாம். ஆனால் அதன்பின் நல்ல பிள்ளையாக விளக்கை அணை த்துவிட வேண்டும். படிப்பதாக இருந் தாலும் அதற்கான விளக்கை பொருத் திக் கொண்டு, துணைக்குத் தொந்தரவில்லாமல் படிக்க வேண்டும்.
தொழில்நுட்பத் தொந்தரவுகள்
தம்பதிகளுக்கான அந்தரங்க இடம் படுக்கையறை. படுக்கையி ல் சாய்ந்து விளையாடி, உறவாடி என்று சிறிது நேரத்துக்கு பின்புதா ன் தம்பதிகளுக்கு `அடுத்த கட்டத் துக்கு’ போகும் மனநிலை வரும். அப்போது பார்த்து செல்போன் ஒலித்தால், பேசிவிட்டுத் திரும்பி வரும்போது எல்லாம் காணாமல் போயிருக்கும். இன்றைய தொழில்நுட்ப வசதிகளால் ஏற்படும் தொ ந்தரவு இது. இதைத் தவிர்க்க, படுக்கையறைக்கு செல்போன், லேப்டாப் போன்றவற்றைக் கொ ண்டு வராதீர்கள். தம்பதிகளின் இனிமையான உறவில் இவை யெல்லாம் குறுக்கீடாக அமைய வேண்டாம்.
முடிவாக…
சிலர், குறிப்பாக மனைவியர், படுக்கைய றையைக் கட்டபஞ்சாயத் து மேடையாக மாற்றுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். அது தூக்கத்தை மட்டுமல்ல, தம்பதிக ளுக்கு இடையிலான நெருக்கத்தையும் பாதிக்கும். குடும்ப பிரச்சினைகளை வே று இடத்தில், வேறு வகையில் நாசூக்கா கச் சொல்லலாமே!