Home சமையல் குறிப்புகள் தக்காளி காரப்பணியாரம்

தக்காளி காரப்பணியாரம்

21

தக்காளி-காரப்பணியாரம்தேவையான பொருட்கள்:

இட்லி மாவு- 2 கப்,
பெங்களூர் தக்காளி- 3
கேரட் துருவல், ஊறவைத்த பச்சைப் பட்டாணி தலா- 3 டேபிள்ஸ்பூன்,
மிளகாய்த்தூள்- 2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு,
கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு தலா ஒரு டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்,
எண்ணெய்- 6 டேபிள் ஸ்பூன்,
உப்பு சிறிதளவு.

செய்முறை:

• தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

• வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி… கடுகு, பெருங்காயத்தூள், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து… கேரட் துருவல், பட்டாணி சேர்த்து வதக்கி, தக்காளியை சேர்த்து மேலும் வதக்கவும். இதனுடன் உப்பு, மிளகாய்த்தூள், கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறி சிறிது நேரம் ஆறவிடவும்.

• பிறகு, இந்தக் கலவையை இட்லி மாவுடன் சேர்த்துக் நன்றாக கலக்கவும். குழிப்பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து, சூடானதும் குழிகளில் சிறிதளவு எண்ணெய் விட்டு, மாவை முக்கால் குழி வரை ஊற்றவும். ஒரு புறம் வெந்ததும் திருப்பிப் போட்டு எடுக்கவும்.

• சுவையான தக்காளி காரப்பணியாரம் ரெடி.