தங்கள் வாழ்நாளில் பெண்களை வெறிக்க வெறிக்க காண்பதற்கு மட்டும் எத்தனை நாட்கள் ஆண்கள் செலவிடுகிறார்கள் என உங்களுக்கு தெரியுமா? ஒரு அழகான துணையால், ஆணின் வாழ்க்கையில் எத்தகையான தாக்கங்கள் எல்லாம் ஏற்படுகிறது என உங்களுக்கு தெரியுமா? ஓர் ஆண், சொட்டையாக இருப்பதாலும் கூட ஓரிரு நன்மைகள் இருக்கின்றன, அதை பற்றியாவது உங்களுக்கு தெரியுமா? இந்த கேள்விகளுக்கு எல்லாம் நீங்கள் வியக்கும்படியான பதில்கள் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க…
வாழ்நாள்! தனது வாழ்நாளில் சராசரியாக ஒரு வருட காலத்தை பெண்களை சைட் / பார்ப்பதில் மட்டும் செலவிடுகிறான் ஆண். இதுவும் ஆய்வு தகவல் தான். மேலும், தனது வாழ்நாளில் ஆறுமாத காலத்தை ஷேவிங் செய்ய செலவிடுகிறான் ஆண். நேர்மையற்ற ஆண்களின் ஐ.கியூ அளவு குறைவாக இருக்கிறது என ஓர் அறிவியல் ஆய்வறிக்கை மூலம் அறியவருகிறது.
கருவளம்! லேப்டாப் மடியில் வைத்து பயன்படுத்தினால் கருவள குறைபாடு ஏற்படும் என்பார்கள். ஆனால், உண்மையில் லேப்டாப் சூடான பிறகு நீங்கள் மடியில் வைத்து பயன்படுத்த கூடாது. உங்கள் அந்தரங்க பகுதி சூடானால் விந்து திறன், ஆரோக்கியம், எண்ணிக்கை குறையும் வாய்ப்புகள் இருக்கின்றன.
முடி! முடி இருக்கும் ஆண்களை காட்டிலும், தலை சொட்டியாக இருக்கும் ஆண்கள் 13% வலிமையானவர்களாக இருக்கிறார்கள் என கூறப்படுகிறது. அதே போல உயரத்திலும் ஒரு இன்ச் அளவு சராசரி உயரமாக இருக்கிறார்கள் என ஆய்வுகள் மூலம் அறியப்பட்டுள்ளன.
மனைவி! தன்னை விட அழகான, கவர்ச்சியான பெண்ணை திருமணம் செய்த ஆண்கள், தங்கள் வாழ்வில் அதிக நிம்மதி, திருப்தி, மனநிறைவு கொண்டிருப்பதாக ஆய்வறிக்கைகள் வெளியாகியுள்ளன. 2020ல் சீனாவில் வாழும் ஆண்களில் மூன்றில் இருந்து நான்கு கோடி ஆண்கள், திருமணம் செய்துக் கொள்ள பெண்கள் இல்லாமல் திண்டாடுவார்கள். இத்தாலியில் மூன்றில் ஒரு ஆண், 30 – 35 வயது வரை சிங்கிளாக தங்கள் பெற்றோருடன் தான் வாழ்ந்து வருகிறார்கள். சராசரியாக ஆண், பெண்ணை காட்டிலும் நான்கில் இருந்து ஐந்து அங்குலம் வரை உயரமாக இருக்கிறார்கள்.