Home பாலியல் டீன் ஏஜ் வயதினர் மத்தியில் அதிகரிக்கும் செக்ஸ் வியாதிகள்….

டீன் ஏஜ் வயதினர் மத்தியில் அதிகரிக்கும் செக்ஸ் வியாதிகள்….

33

26-sex56-300டீன் ஏஜ் வயதினர் மத்தியில் செக்ஸ் வியாதிகள் அதிகரித்து வருவதாக டாக்டர்கள் அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளனர். பள்ளிகள் அளவில் செக்ஸ் கல்வியை வலுப்படுத்தாவிட்டால் அபாயகரமான நிலையை நோக்கி நாடு போய் விடும் வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் எச்சரிக்கிறார்கள்.

பாதுகாப்பில்லாத செக்ஸ் உறவில் டீன் ஏஜ் வயதினர் அதிக அளவில் ஈடுபடுவதால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் நிபுணர்கள் கூறுகிறார்கள். பாலியல் வியாதிகளைத் தடுக்கவும், குறைக்கவும் போதுமான அளவில் விழிப்புணர்வு பிரசாரங்கள் நடந்து வந்தாலும் கூட டீன் ஏஜ் வயதினர் அதையெல்லாம் காதில் போட்டுக் கொள்வது போலவே தெரியவில்லை என்றும் நிபுணர்கள் கவலைப்படுகிறார்கள். மத்திய அரசு நடத்தி வரும் டெல்லி, லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மட்டும் கடந்த நான்கு ஆண்டுகளில் பாலியல் வியாதிக்காக சிகிச்சை பெற வரும் சிறார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாம்.

பள்ளிக் கல்வித் திட்டத்தில் பாலியல் சம்பந்தமான பாடங்கள் போதிய அளவில் இல்லாததே இந்த அவல நிலைக்குக் காரணம் என்று டாக்டர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். டாக்டர்கள் விபு மென்டிரட்டா, செளம்யா அகர்வால், ராம் சந்தர் ஆகியோர் கூறுகையில், 19 வயதுக்குட்பட்ட பாலியல் நோயாளிகள் அதிகரித்து வருவது வருத்தம் தருகிறது., கவலை தருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் பாலியல் வியாதி பாதிப்பு எண்ணிக்கை ஒரு சதவீதத்திலிருந்து 4.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. சாதாரண வைரல், பாக்டீரியல் வியாதி முதல், எச்ஐவி, மொலஸ்கம் கான்டோசியம், சியனியா அக்மினேட்டே, ஹெர்பஸ் ஜெனிட்டாலிஸ், செகண்டரி சிபிலிஸ் ஆகிய வியாதிகள் வரை அதிகரித்து காணப்படுகிறது.

இதுவரை 1140 சிறார்கள் பாலியல்வியாதி பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்றுள்ளனர். இதில் இரண்டு சிறார்கள், பலருடன் உறவு கொண்டு பாதிப்பைச் சந்தித்துள்ளனர். 75 சதவீதம் பேர் ஆரம்பத்தில் பாதுகாப்பற்ற உறவை மேற்கொண்டுள்ளனர். பின்னர் பாதுகாப்பு சாதனங்களுக்கு மாறியுள்ளனர். இதனால் அவர்களும் பாதிப்பை சந்தித்துள்ளனர். 3 சிறுவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களுடன் உறவு வைத்து பாதிப்படைந்துள்ளனர். ஒரு பெண், விபச்சாரத்தில் தள்ளப்பட்டுள்ளார் என்று அவர்கள் கூறினர்.