Home சமையல் குறிப்புகள் டின் மீன் கட்லட்.

டின் மீன் கட்லட்.

27

மீன் ஒரு டின்.
பச்சை மிளகாய்-5
முட்டை-2
பெரிய வெங்காயம்- 2
இஞ்சி-1 துண்டு,பூண்டு- 2 பல் (இடித்து)
பிஸ்கட் தூள் -தேவையான அளவு
எலுமிச்சை-பாதி
மஞ்சள்தூள்-1டீஸ்பூன்
எண்ணெய்- தேவையான அளவு
உப்பு-தேவையான அளவு
கொத்துமல்லி இலை -1 கட்டு

மீனை மஞ்சள் தூள் உப்பு சேர்த்து வேகவைக்கவும். தோலை உரித்து முள்ளை எடுத்து விட்டு ஊதிர்த்துக்கொள்ளவும். இடித்த பூண்டு இஞ்சி நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய், கொத்துமல்லி இலை என்பவற்றை சேர்த்து வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்றாக வதக்கி உதிர்த்த மீனுடன் சேர்த்து பிசையவும். முட்டையை அடித்துக்கொள்ளவும். மீன் கலவையில் சிறிதளவு எடுத்து வட்டமாகச் செய்து அடித்த முட்டையில் நனைத்து பிஸ்கட் தூளில் புரட்டி பொரித்து எடுக்கவும்.சுவை மிகுந்த மீன் கட்லட் தயார்.