naturel sperm pass,Curvature Of Penis,long penis, big penis,body welth.,sex tried,mastrubustion,eat sperm.,spern drinking,penis,bendingpenis,penis problenஜிப்பர் என்பது உடைகளில் திறந்திருக்கும் பகுதியை மூடுவதற்கு, திறப்பின் விளிம்புகளை ஒன்றாகப் பிணைக்க உதவும் சாதனமாகும். கால்சட்டைகளில் (பேன்ட்ஸ்) ஆணுறுப்புக்கு அருகில் ஜிப் அமைந்துள்ளதால், ஆணுறுப்பில் காயம்படும் வாய்ப்பு அதிகமுள்ளது.
ஜிப் போடும்போது அல்லது கழற்றும்போது ஆணுறுப்பின் தோல் ஜிப்பில் சிக்கிக்கொள்ளுதல், மொட்டு முனைத்தோல் அல்லது ஆணுறுப்புத் தோலின் பிற தளர்வான பகுதியில் காயம்படுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். ஆண்கள் சிறுநீர் கழித்த பிறகு ஆணுறுப்பை உள்ளாடைக்குள் தள்ளிவிட்டு, பிறகே ஜிப் போட வேண்டும். பெரும்பாலும், மீண்டும் ஜிப் போடும்போது தான் இப்படி ஏதேனும் காயம்படும்.
நீங்கள் நினைப்பதைவிட அதிகமாகவே ஆணுறுப்பு ஜிப்பில் சிக்கிக்கொள்வது நடக்கிறது (Penis entrapment happens more commonly than you thought)
சிறு வயது ஆண்களுக்கு மட்டுமே இந்தப் பிரச்சனை ஏற்படும் என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் யூராலாஜி இண்டர்நேஷனலில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, இது எல்லோருக்குமே மிகவும் பொதுவான ஒரு பிரச்சனை என்று தெரியவருகிறது.
இந்த ஆய்வில் கண்டறியப்பட்ட உண்மைகள்:
அமெரிக்காவில் 2002 முதல் 2010 வரையிலான எட்டு வருட காலத்தில், கால்சட்டை (ட்ரவுசர்) ஜிப் போடும்போது அடிபட்ட பிரச்சனைகளுக்காக அவசர உதவிக்காக சுமார் 17,616 பேர் மருத்துவமனைகளுக்கு வந்துள்ளனர்.
கிட்டத்தட்ட இவர்களில் எல்லோருக்குமே, ஜிப்பில் ஆணுறுப்பு சிக்கியுள்ளது (மொத்தத்தில் விரைப்பை சிக்கிக்கொள்வது என்பது 1 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்துள்ளது).
ஆணுறுப்பில் காயம்படும் மொத்த நிகழ்வுகளில் ஐந்தில் ஒரு பங்கு சம்பவங்கள் ஜிப் போடும்போது/அவிழ்க்கும்போதே ஏற்படுகின்றன.
ஜிப் தொடர்பான அடிபடும் பிரச்சனைகள் ஆண்களுக்கு மட்டுமின்றி குழந்தைகளுக்கும் ஏற்படுகின்றன.
பெரியவர்களில், ஆணுறுப்பில் அடிபடுவதில் பெரும்பாலான காயங்களுக்குக் காரணம் ஜிப் போடுவது/அவிழ்ப்பது தொடர்பான சம்பவங்களே.
ஆணுறுப்பு சிக்கிக்கொள்வதில் உள்ள வகைகள் (Types of zipper entrapment)
இதில் இரண்டு வகைகள் உள்ளன
நகரக்கூடிய ஜிப்பருக்குள் தோல் மாட்டிக்கொள்வது (இதுவே பெரும்பாலும் ஏற்படும் பிரச்சனை)
தோல் சிக்கிக்கொண்டிருக்கும் இடத்தைத் தாண்டியும் ஜிப்பர் நகர்ந்து சென்றுவிட்டிருக்கும், தோல் ஜிப் பற்களுக்கு இடையே நன்றாக மாட்டிக்கொண்டிருக்கும் (இது மிகவும் அரிது)
இதன் அறிகுறிகள் என்னென்ன? (What are the symptoms caused by zipper entrapment?)
இதன் அறிகுறிகளாவன:
ஆணுறுப்பின் தோலில் வலி
சிராய்ப்பு
சிராய்ப்புக் காயம்
ஆணுறுப்பின் குறிப்பிட்ட பகுதியில் வீக்கம்
தோல் அல்லது திசு இறப்பு (திசு நசிவு) அரிதாக ஏற்படும்
நிர்வகித்தல் (Management)
இந்தப் பிரச்சனையை நிர்வகிப்பதற்கு என்று பல்வேறு முறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன, அவற்றின் வெற்றிவாய்ப்பும் ஒவ்வொரு முறைக்கும் வேறுபடுகிறது. சிக்கிக்கொண்ட ஆணுறுப்பை பத்திரமாக வெளியே எடுக்க மருத்துவரிடம் செல்வது நல்லது. பொதுவாக, மாட்டிக்கொண்ட தோலை வெளியே எடுக்க, ஜிப்பை நீக்கி அகற்ற வேண்டியிருக்கும்.
A) தோல் சிக்கிக்கொண்ட இடத்தையும் தாண்டி ஜிப்பர் நகர்ந்துவிட்டிருந்தால் (Zipper has moved beyond the site of entrapment)
தோல் மாட்டிக்கொண்ட இடத்தையும் ஜிப்பர் தாண்டிச் சென்றுவிட்டு, ஜிப் பற்களுக்கு இடையே தோல் மாட்டிக்கொண்டு இருந்தால், இடுக்கிக்கொண்டு இருக்கும் ஜிப்பர் பற்களுக்கு இடையே மாட்டிக்கொண்டிருக்கும் துணியை வெட்டுவதன் மூலம் தோலை பத்திரமாக வெளியே எடுக்கலாம்.
B) நகரும் ஜிப்பருக்குள் தோல் மாட்டிக்கொண்டிருந்தால் (The skin is trapped in the moveable zipper)
ஜிப்பருக்குள்ளேயே தோல் மாட்டிக்கொண்டு இருந்தால், பத்திரமாக வெளியே எடுப்பது மிகக் கடினம்.
இப்படி நேர்ந்தால், மினரல் ஆயில் போன்ற வழவழப்புப் பொருளைச் சேர்த்து அல்லது சேர்க்காமல் ஜிப்பை அவிழ்க்க முயற்சிப்பதே முதல் படியாகும்.
வலி அதிகமாக இருப்பதால், வீக்கம் இருப்பதால், மிகுந்த சிக்கலாக மாட்டிக்கொண்டு இருப்பதால் இப்படிச் செய்ய முடியாமல் போனால், பிற முறைகளை முயற்சி செய்யலாம்.
நகரக்கூடிய ஜிப் தலைப்பகுதிக்கு முன் பகுதியில் இருக்கும் நடுப் பட்டையை, போன் அல்லது வயர் கட்டரைப் பயன்படுத்தி இரண்டாக வெட்டினால், ஜிப்பர் தனித்தனியாக உடையும். இதனால் மாட்டிக்கொண்ட தோலை சற்று வலி குறைவாக வெளியே எடுக்க முடியும்.
அந்த ஜிப் ஃபேஸ்பிளேட்டுகளை முழுதுமாகப் பிரிப்பது மிகவும் கடினம், என்று சிலர் கூறுவதால் பகுதியளவு அவற்றைப் பிரித்து நீக்கி முயற்சிக்கலாம். உட்பக்க மற்றும் வெளிப்பக்க ஃபேஸ் பிளேட்டுகளுக்கு இடையே ஸ்க்ரூடிரைவரைச் செருகி, நடுப் பட்டையை நோக்கி லேசாகத் திருப்பியபடி நகர்த்துவதன் மூலம் தோலை வெளியே எடுக்கலாம். இப்படிச் செய்வதால் ஃபேஸ்பிளேட்டுகளுக்கு இடையிலான இடைவெளி அகலமாகும், இது தோலை எளிதாக எடுக்க உதவியாக இருக்கும்.
சில சமயம், பிளையர்சைப் பயன்படுத்தி குறுக்காக அழுத்துவதன் மூலமும் தோலை வெளியே எடுக்கலாம்.
மூடிய ஜிப்பின் பல்லை வெட்டுவதும் பலனளிக்கும் என்று கூறப்படுகிறது.
பிற எல்லா முறைகளும் தோல்வியடைந்தால், மருத்துவர் தோல் பகுதிக்கு மயக்க மருந்து செலுத்தி, நீள்வட்ட வடிவில் வெட்டுவதன் மூலம் சிக்கிக்கொண்ட தோலை பத்திரமாக வெட்டி அகற்றுவார் அல்லது மொட்டு முனைத் தோலை வெட்டி தோல் விடுவிக்கப்படுகிறது.