சோள மாவு – 1 கப்
வெந்தயக்கீரை – 2 கைப்பிடி
சீரகத்தூள் – 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு
நல்லெண்ணெய் – 5 தேக்கரண்டி
தண்ணீர் – 11/2 கப்
செய்முறை :
• வெந்தயக்கீரையை பொடியாக நறுக்கி வைக்கவும்.
• வாணலியில் கீரையை போட்டு லேசாக வதக்கவும்.
• பின்பு அதில் 11/2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
• கொதிக்கும் போது சீரகத்தூய், மிளகாய்தூள், மஞ்சள் தூள் உப்பு சேர்த்து கலந்து அத்துடன் சோள மாவையும் சேர்த்து கட்டிபிடிக்காத அளவுக்கு கலந்திடுங்கள். பின்பு அடுப்பை அணைத்து பாத்திரத்தை மூடி வைத்து விடுங்கள்.
• ஆறியதும் மாவை நன்கு பிசைந்து, எலுமிச்சை பழ அளவு உருண்டைகளாக்குங்கள்.
• பின்பு வாழை இலையில் சிறிது எண்ணெய் தடவி, உருண்டையை வைத்து மெலிதாக தட்டி இலையை நீக்கிவிட்டு தோசைக்ல்லில் இட்டு மாவை இருபுறமும் வேகவிடுங்கள். இதை தயிருடன் தொட்டு சாப்பிட்டால் ரொம்ப டேஸ்ட்டாக இருக்கும்.