Home பெண்கள் தாய்மை நலம் சோம்பை தினமும் இப்படி செய்து சாப்பிட்டால் குழந்தை கொழுாழுன்னு பிறக்குமாம்..

சோம்பை தினமும் இப்படி செய்து சாப்பிட்டால் குழந்தை கொழுாழுன்னு பிறக்குமாம்..

46

பெண்கள் எல்லோருக்குமே தனக்குப் பிறக்கும் குழந்தை கொழுக் மொழுக்கென்று, பார்ப்பவர்கள் அள்ளிக் கொள்ளும் அளவுக்குப் பிறக்கும் பிறக்க வேண்டுமென்று தான் ஆசை. அதற்குக் குறிப்பாக என்னவெல்லாம் சாப்பிடலாம் என்று தெரியாமலேயே, யார் என்ன சொன்னாலும் குழந்தைக்காக சாப்பிடுவார்கள்.

அப்படி கண்டதையெல்லாம் சாப்பிடுவதை இன்றோடு விட்டுவிட்டு, கீழ்வரும் சிலவற்றை அதிகமாக உட்கொள்ளுங்கள். அப்புறம் பருங்கள் எல்லோரும் கடித்துத் தின்னும் அளவுக்கு கொழுக் மொழுக் குழந்தை பிறக்கும்.

சோம்பு

கர்ப்பிணிப் பெண்கள் காலையில் எழுந்தவுடன் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். அப்படி காலையில் குடிக்க வேண்டிய தண்ணீரில் முதல் நாள் இரவே 1 ஸ்பூன் சோம்பைப் போட்டு ஊறவிட்டு, காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் குழந்தையின் நிறம் கூடும்.

பாதாம்

கர்ப்ப காலத்தில் பெண்கள் உலர்ந்த அல்லது ஊறவைத்த பாதாம் பருப்பை தினமும் சாப்பிட்டு வந்தால் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்கும்.

பால்

கர்ப்பிணிப் பெண்கள் பால் அருந்துவது மிக அவசியம். பால் குழந்தையின் வளர்ச்சியைத் தூண்டும்.

அன்னாசி

கர்ப்ப காலத்தின் தொடக்கத்தில் அன்னாசிப்பபழத்தைச் சாப்பிடக்கூடாது என்று சொல்வார்கள். ஆனால் 5 மாதங்களுக்குப் பிறகு அன்னாசிப்பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது. குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்க வேண்டுமென்றால், வாரத்துக்கு ஒரு முறையாவது அன்னாசி பழ ஜூஸ் குடிப்பது நல்லது.

தேங்காய்

கர்ப்பிணிகள் தேங்காய் அதிகமாகச் சாப்பி்க்கூடாது. நெஞ்சை கரிக்கும் என்று சொல்வதுண்டு. ஆனால் அது முற்றிலும் தவறு. தேங்காய் சாப்பிடுவதால் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.

முட்டை

முட்டையில் முழுக்க முழுக்க புரதம் இருப்பதால் அது குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுகிறது. அதில் மஞ்சள் கருவை ஒதுக்கிவிடக்கூடாது. வெள்ளைக்கருவில் உள்ள அதே அளவு புரதம் மஞ்சள் கருவிலும் உண்டு.

குங்குமப்பூ

தினமும் இரவில் தூங்கச் செல்லும் முன் குங்குமப்பூவை பாலில் கலந்து குடித்து வர, எந்த தொந்தரவுமின்றி, நல்ல நிம்மதியான தூக்கம் வரும். குழந்தையின் நிறம் கூடும்.

ஆரஞ்சு

ஆரஞ்சு பழத்தை கர்ப்பிணிகள் தினமும் சாப்பிட்டு வருவது எலும்புகளுக்கு வலிமையைக் கொடுக்கும். குழந்தையின் ஸ்கின் டோன் கூடும்.