Home பாலியல் செயற்கை முறையில் பெண்ணுறுப்பில் விந்தணு செலுத்துவது எப்படி…!! (வீடியோ இணைப்பு)

செயற்கை முறையில் பெண்ணுறுப்பில் விந்தணு செலுத்துவது எப்படி…!! (வீடியோ இணைப்பு)

83

ஒரு குழந்தை உருவாகுவதற்கு பெண்ணிலே உருவாகியிருக்கும் முட்டையை ஆணின் விந்தணு போய் கருக்கட்ட வேண்டும். இதற்கு அந்த ஆணின் விந்தணுக்கள் பெண்ணின் யோனி வழியே உட்செலுத்தப் பட வேண்டும். இது சாதாரணமாக உடலுறவின் போது நடைபெறும்.

ஆனாலும் சில தம்பதிகளுக்கு குழந்தை பிறப்பது பிற் போகும் போது , அல்லது அந்த ஆணின் சுக்கிலப் பாயத்தில உள்ள விந்துகளின் திறன் (குறிப்பாக விந்துகளின் எண்ணிக்கை மற்றும் அசையும் தன்மை ) குறைவாக இருக்கும் போது உடலுறவின் போது செலுத்தப் படும் விந்துகள் மூலம் கருக்கட்டல் நடைபெற்று குழந்தை உருவாகுவது தடைப் படலாம்.

இந்த மாதிரியான சந்தர்ப்பத்தில் கருக்கட்டலை இலகுவாக்குவதற்காக INTRAUTERINE INSEMINATION(IUI) எனப்படும் செயன் முறை பயன்படலாம்.

இந்த முறையின் போது ஆணின் விந்தணுக்கள் ஒரு குழாய் மூலம் பெண்ணின் கருப்பைப் பையினுள் செலுத்தப் படும்(வைத்தியரினால் )

இதற்காக கணவன் சுய இன்பத்தின் மூலம் சுக்கிலப்பாயத்தை சேகரித்து கொடுக்க வேண்டும். இது நேரடியாக கருப்பையினுள் குழாய் மூலம் வைத்தியரினால் செலுத்தப்படும்.

இந்த செய்முறை மூலம் குழந்தை உருவாகும் சந்தர்ப்பத்தை மேலும் அதிகரிக்க கணவனின் சுக்கிலப் பாயமானது பதப்படுத்தப்(PROCESSING) பட்ட பின்பு செலுத்தப்படலாம். அதாவது அவரது சுக்கிலப் பாயத்தில் உள்ள திறன் கூடிய விந்துகளை மட்டும் பிரித்து அனுப்புவதன் மூலம் குழந்தை உருவாகும் சந்தர்ப்பம் அதிகரிக்கலாம்.

சில வேளை ஆணின் விந்துகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக அல்லது சுக்கிலப் பாயத்தில் விந்து இல்லாமல் இருக்கும் பட்சத்தில் அந்த தம்பதி ஏற்றுக் கொண்டால் வேறு ஒரு நபரின் சுக்கிலப் பாயத்தை பெற்று பெண்ணின் கருப்பைப் பைக்குள் செலுத்தி குழந்தை உருவாக்கிக் கொள்ளலாம்.

இவ்வாறு விந்துகள் செலுத்தப்படுவது பெண்ணிலே முட்டை உருவாகும் நேரத்திலே மேற்கொள்ளப்படும். சில வேளை அந்தப் பெண்ணுக்கு முட்டை உருவாக்கத்தை தூண்டும் மருந்துகள் கொடுக்கப்பட்டு பின்பு ஸ்கேனிங் மூலம் முட்டை உருவாக்கி உள்ளது என்று உறுதி செய்த பின்பே கொடுக்கப்படும்.

ஸ்கேனிங் வசதியில்லாத சில வைத்திய சாலைகளில் பெண்ணின் மாதவிடாய் காலத்தை கணித்து அதற்கேற்ப முட்டை உருவாகும் தினத்தை அனுமானித்த பின்பு இவ்வாறு விந்துகள் செலுத்தப் படலாம்.