Home சூடான செய்திகள் செக்ஸ் பற்றி கணவன் – மனைவி ஏன் வெளிப்படையாக பேசிக் கொள்ள வேண்டும்?

செக்ஸ் பற்றி கணவன் – மனைவி ஏன் வெளிப்படையாக பேசிக் கொள்ள வேண்டும்?

30

9c46c-953598-coupleஇன்றைய காலகட்டத்தில் திருமண வாழ்க்கை என்பது கடமைக்கு வாழும் ஒரு வாழ்க்கையாக பல தம்பதிகளிடையே இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் இருவருக்கும் சரியான புரிதல் இல்லாததும், தாம்பத்திய வாழ்வில் ஏற்படும் ஏமாற்றமும் தான். இதனால் ஆண்கள் பலர் தன் மனைவி இருக்கும் போதே பிற பெண்களை நாடுகிறார்கள். முதலில் ஆண்கள் ஏன் தன் மனைவியை விட்டு விலகிப் போகிறார்கள் என்று தெரியுமா..!

திருமணமான தொடக்கத்தில் இருவருக்கும் அதிகமான நெருக்கம் காணப்படுவதால், அவர்களுக்கு எந்தவித சண்டைகளும் வருவதில்லை. ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவர்களுக்குள் இருக்கும் இடைவெளி அதிகமாகிக் கொண்டே செல்கிறது.

இந்நேரத்தில் சரியான தாம்பத்திய உறவு இல்லாது போகும் போது அவர்களுக்கு வெறுப்பு ஏற்படுகிறது. இந்த வெறுப்பே அவர்களுக்கு இடையில் சண்டைகளை வரவழைத்து பிரிவை ஏற்படுத்துகிறது. இப்படி மனைவியிடம் போதிய ஈடுபாடு வராமல் போகும் போது ஆண்களுக்கு மனைவி மீதான ஈர்ப்பு குறையலாம்.

மனைவி தனக்கு ஒத்துழைப்புத் தருவதில்லை என்ற ஏமாற்றம் அவர்களை மனைவியிடமிருந்து விலகிப் போக வைக்கிறது. அதுமட்டுமின்றி இருவரும் செக்ஸ் பற்றி வெளிப்படையாக பேசுவது இல்லை. பொதுவாக ஆண்கள் செக்ஸ் பற்றி வெளிபடையாக பேசுவதற்கு வெட்கப்படுவதில்லை. ஆனால் பல பெண்கள் செக்ஸ் பற்றி தங்கள் கணவரிடம் பேசுவதற்கு வெட்கப்படுகிறார்கள்.

அதுமட்டுமின்றி அப்படி கணவரிடம் பேசினால் அவர் என்ன நினைப்பரோ? என்ற எண்ணம் ஏற்பட்டு, அதைப் பற்றி கணவரே வந்து பேசுகையில் விலகி செல்கிறார்கள். செக்ஸ் என்பது இருவரது உணர்ச்சி மட்டுமல்ல அன்பு சம்பந்தப்பட்டது.

இதைப் பற்றி பேசுவதற்கு வெட்கப்படவேண்டிய அவசியம் இல்லை. மனைவிகளே! உங்களது விருப்பு வெறுப்பு பற்றி கணவருடன் மனம் திறந்து பேசுங்கள். இவ்வாறு உங்களின் வெளிப்படையான கருத்து உங்கள் கணவருக்கு உங்கள் மீதான அன்பை அதிகரிக்கும். அப்பொழுது தான் கணவர் வேறு பெண்களிடம் செல்வதை தடுக்கலாம்.

முக்கியமாக குழந்தைப் பெற்ற பிறகு பெரும்பாலான பெண்கள் குண்டாகி விடுகிறார்கள். இதுவும் ஆண்கள், மனைவியை விட்டு விலக ஒரு முக்கியக் காரணம். பலர் அப்படி இல்லை என்றாலும் பல ஆண்களுக்கு தன் மனைவி எப்போதும் ஸ்லிம்மாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

ஏனெனில் இப்படி குண்டாக இருக்கும் பெண்களுக்கு செக்ஸ் ஆர்வம் குறைவதால், அது கணவர்கள் பார்வையில் சற்று சலிப்பை ஏற்படுத்துகிறது. ஆண்கள் எப்பொழுதும் தங்களது துணை தங்களுக்கு பிடித்த மாதிரி இருக்க வேண்டும், உடுத்தும் உடையிலோ அல்லது செய்யும் செயலிலோ தன் மனைவி தங்களை கவர வேண்டும் என்று நினைப்பார்கள்.

மாறாக அவ்வாறு இல்லாது போனால் அவர்களுக்கு தங்களது துணை மீது சற்று சலிப்பு ஏற்படுகிறது. அதுவே இன்னும் ஒரு பெண்ணிடம் தங்களுக்கு பிடித்த குணங்களை கண்டாலோ அல்லது அழகாய் இருந்தாலோ, அவர்களது மனம் சற்று தடுமாற செய்கிறது. சில பெண்கள் கணவர் ஆசையாக மோகத்துடன் நெருங்கி வரும் போது விலகிப் போக ஆரம்பிக்கிறார்கள்.

இது ஆண்களுக்கு பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்துவதுடன் வெறுப்பையும் உண்டாக்குகிறது. இதன் காரணமாகவும் ஆண்கள் விலகிச் செல்கிறார்கள். எனவே கணவன்-மனைவி இருவருமே சற்றும் கூச்சப்படாமல் உடலுறவு பற்றி வெளிப்படையாக பேசிக் கொள்ளுங்கள். இதனால் பல பிரச்சனைகளைத் தடுக்கலாம்.