தாம்பத்திய உறவுக்கு பின் தவிர்க்க சில செயல்கள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்..
செக்ஸ் உறவு முடிந்த உடனேயே தூங்கிவிடாதீர்கள். இது தவறான அணுகுமுறையாகும். ஏனெனில் உங்களுக்கிடையேயான தாம்பத்யம் எவ்வாறு இருந்தது என்பதை சிந்திக்க முடியாமல் போய்விடும்.
பல தம்பதிகள் உறவு முடிந்தப் பின் வேலை அல்லது படிப்பைக் கவனிக்கப் போய்விடுவார்கள். காரணம் தாம்பத்திய உறவின் போதும் அவர்களின் மனதை வேலை அல்லது படிப்பு தான் ஆக்கிரமித்திருக்கிறது. எப்படி வேலையின் போது செக்ஸ் எண்ணங்கள் மனதில் அலைபாய்வது தவறோ, அதே போல தான் உறவின் போது படிப்போ, வேலையோ இடையே வருவதை தவிர்க்க வேண்டும்.
உறவிற்கு பின் சாப்பிடுவது மிகவும் மோசமான விஷயமாகும். உங்களுக்கு உடல் பசியை விட குடல் பசி தான் பெரியது என்றும் உறவின் போது நிச்சயமாக நீங்கள் உங்கள் வயிற்றை பற்றிதான் சிந்தித்து இருப்பீர்கள் என்று உங்கள் துணையை தவறாக நினைக்க வைத்து விடும்.
உறவிற்குப் பின் குளித்து உடலை தூய்மைப் படுத்திக்கொள்வது நல்லதுதான். அந்தரங்கச் சூழலில் அடுத்தவரை ஊடுருவ விடுவது, அந்தச் சந்தோசத்தின் முழுமையைச் சிதைத்து விடும். உறவு நேரத்திற்குப் பின் குழந்தைகளை அழைத்து உடன் படுக்க வைத்துக்கொள்ளுவது இயல்பாகவே பெண்களுக்கு அதிகம். இன்னும் “ரொமாண்டிக் மூடில்” இருந்து மாறாத கணவனுக்கு அது ஏமாற்றத்தைத் தரும்.