அதனால் தம்பதிகள் தங்களிடம் இருக்கும் சின்னச்சின்ன பிணக்குகளை மறந்து சிரித்துப் பேசி அன்பை மேம்படுத்திக் கொண்டே படுக்கை அறைக்குள் நுழைய வேண்டும்.
செக்ஸ்சை தங்களுக்கு பிடித்த நல்ல விளையாட்டாக எடுத்துக்கொண்டு, விளையாட்டுத் தனமாகவே அதில் ஈடுபட வேண்டும். இந்த விளையாட்டு வெற்றி, தோல்வி, திருப்தி போன்ற அனைத்துக்கும் அப்பாற்பட்டதாக அன்பை மட்டுமே பிரதானமாகக் கொண்டதாக அமையவேண்டும்.
தூக்கம் என்பது ஒரு நாள் முழுக்க மனதும்- உடலும் அனுபவிக்கும் டென்ஷனைத் தீர்ப்பது. நேற்றுதான் தூங்கியிருக்கிறோமே அதனால் இன்று தூங்கவேண்டாம் என்று யாரும் கருதுவதில்லை. தினமும் தூங்கித்தான் ஆக வேண்டும் என்பது கட்டாயம். அதுபோல் செக்சையும் நினைக்கக்கூடாது.
தூக்கத்திற்கு முன்னால் ஏற்படுத்திக்கொள்ளும் பொழுதுபோக்கு என்றும் செக்சை கருதிவிடக்கூடாது. தம்பதிகளிடையேயான செக்ஸ் என்பது கடமைக்காக என்ற நிலையில் இருந்து விடக்கூடாது. இருவரையும் தூக்கத்திற்கு கொண்டு செல்லும் மருந்தாகவும் அதை கருதிவிடக்கூடாது.
ஏதோ இதுவும் ஒரு வேலை என்ற மனநிலையில் இருவரும் உறவில் ஈடுபடவும் கூடாது. உறவுக்கு நீங்கள் இருவரும் தயாராக இருக்கும் நாளில் காலையில் இருந்தே உங்கள் நினைவில் அந்த இன்பம் இருக்கட்டும். அதை நினைவில் வைத்துக்கொண்டே உற்சாகத்தோடு வேலைகளைப் பாருங்கள்.
அன்று இரவு உணவை சற்று முன்பாகவே முடித்துவிட்டு, வேலைகளை எல்லாம் செய்து முடியுங்கள். வழக்கமாக கணவனும் – மனைவியும் பேசித் தீர்க்க வேண்டிய விஷயங்களை எல்லாம் பேசிவிட்டு, அன்போடு, ஆவலோடு படுக்கை அறைக்குள் நுழையுங்கள்.
அங்கு சென்ற பின்பு தொந்தரவிற்குரிய பேச்சு, சிந்தனை எதுவும் தேவையில்லை. உடல், மனது இரண்டையும் உற்சாகப்படுத்தவும்- அன்பை மேம்படுத்தவும் செக்ஸ் அவசியம் என்பதை உணர்ந்து அதற்குரிய செயலில் ஈடுபடுங்கள். காலையில் செயல்படுவது, அந்த நாள் முழுவதையும் மகிழ்ச்சிக்குரியதாக்கும்.