Home பாலியல் செக்ஸ்சில் ரசனை மிக அவசியம்!

செக்ஸ்சில் ரசனை மிக அவசியம்!

31

19-couple45அதிகப்படியான வேலைப்பளு, சரியாக சாப்பிடவே நேரம் இல்லாத போது செக்ஸ்க்கு எங்கே நேரம் ஒதுக்குவது என்று சலித்துக்கொள்கின்றனர் இன்றைய இளம் தம்பதியினர். த‌ற்போ‌திரு‌க்கு‌ம் கால‌க்க‌ட்ட‌த்‌தி‌ல் ‌திருமண‌த்‌தி‌ற்கு‌ப் ‌பி‌ன்பு ஏ‌ற்படு‌ம் ‌சில பல ‌பிர‌ச்‌சினைக‌ளினா‌ல் குடு‌ம்ப உறவுக‌ள் த‌விடுபொடியா‌கி‌க் கொ‌ண்டிரு‌க்‌கின்றன. காத‌ல் வ‌ங்‌கி‌த் துவ‌க்க வே‌ண்டிய அள‌வி‌ற்கு தம்பதியரிடையே காதலு‌க்கு‌ப் ப‌ஞ்ச‌ம் ஏ‌ற்ப‌ட்டு‌விடுமோ எ‌ன்று அ‌ஞ்ச வே‌ண்டிய ‌நிலை வ‌ந்து‌வி‌ட்டது. இத‌ற்கெ‌ல்லா‌ம் அடி‌ப்படை‌‌க் காரண‌ம் தா‌ம்ப‌த்‌திய உற‌வி‌ல் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ள ச‌ரிவு ‌நிலைதான் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.
எ‌ந்த ‌பிர‌ச்‌சினையாக இரு‌ந்தாலு‌ம் மரு‌த்துவரை அணுகு‌‌ம் த‌ம்ப‌திக‌ள், தா‌ம்ப‌த்ய உற‌வி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌பிர‌ச்‌சினைகளு‌க்கு மரு‌த்துவரை அணுக பெ‌ரிது‌ம் த‌ய‌ங்கு‌கி‌ன்றன‌ர். இதைப் போய் எப்படி யாரிடம் கேட்பது என்ற கூச்ச உணர்வுதான் அவர்களை யோசிக்க வைக்கிறது. எனவே தாம்பத்ய உறவில் தடுமாறும் தம்பதியருக்கு சில விளக்கங்களை அளித்துள்ளனர் உளவியல் நிபுணர்கள். படியுங்களேன்.
சலிப்பா இருக்கா?
எ‌ப்போது‌ம் ஒரே முறை‌யிலான உட‌ல் உறவு கூட ச‌லி‌ப்பை ஏ‌ற்படு‌த்தலா‌ம். எனவே உட‌ல் உறவு கொ‌ள்ளு‌ம் முறைக‌ளிலு‌ம் மா‌ற்ற‌ங்களை ஏ‌ற்படு‌த்‌தி‌க் கொ‌ள்ளலா‌ம்.
அதாவது ‌சில ‌விஷய‌ங்களை மா‌ற்‌றி‌ப் பாரு‌ங்க‌ள் எ‌ன்பதே உளவியல் நிபுணர்களின் முத‌ல் ஆலோசனை. ‌சில‌ த‌ம்ப‌திக‌ள் எ‌ப்போது‌ம் இர‌வி‌ல் ம‌ட்டுமே உறவு கொ‌ள்வா‌ர்க‌ள். தூ‌க்க களை‌‌ப்‌பிலு‌ம், உடலு‌க்கு உற‌க்க‌ம் தேவை‌ப்படு‌ம் நேர‌த்‌திலு‌ம் உறவு கொ‌ள்வதா‌ல் அ‌தி‌ல் ஒரு ச‌லி‌ப்பு ஏ‌ற்படலா‌ம். ‌சில நேர‌ங்க‌ளி‌ல் காலை‌யி‌ல் கு‌ளி‌த்து முடி‌த்து உடலு‌ம், மனமு‌ம் உ‌ற்சாகமாக இரு‌க்கு‌ம் போது உறவு கொ‌ள்வ‌தி‌ல் ‌நி‌ச்சய‌ம் புது‌விதமான மா‌ற்ற‌த்தை உணர முடியு‌ம். அது போலவே, இரு‌ட்டி‌ல் உட‌ல் உறவு கொ‌ள்ளு‌ம் த‌ம்ப‌திக‌ள், ‌சி‌றிது வெ‌ளி‌ச்ச‌த்‌திலு‌ம், வெ‌ளி‌ச்ச‌த்‌தி‌ல் உட‌ல் உறவு கொ‌ள்ளு‌ம் த‌ம்ப‌திக‌ள் லேசான இரு‌ட்டிலு‌ம் உட‌ல் உறவு கொ‌ள்ளலா‌ம்.
நேரம் ஒதுக்குங்கள்
மூன்று நிமிடத்தில் முடிந்து விடும் உறவல்ல செக்ஸ். அதற்காக கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள். தம்பதியர் இருவருமே த‌ங்களது அ‌ன்பை வெ‌ளி‌ப்படு‌த்து‌ம் ‌விதமாக நட‌ந்து கொ‌ள்வது ந‌ல்லது. உட‌ல் உறவு கொ‌ள்ள இ‌ந்த நா‌ட்க‌ள் ம‌ட்டுமே எ‌ன்று ப‌ட்டிய‌ல் போ‌ட்டு‌க் கொ‌ள்ளாம‌ல் த‌ம்ப‌திக‌ளி‌ன் ஆசை‌‌க்கே‌ற்ப உட‌ல் உறவு வை‌த்து‌க் கொ‌ள்வது ந‌ல்ல த‌ம்ப‌த்‌திய‌த்‌தி‌ற்கு வ‌ழிகோலு‌ம் என்கின்றனர் நிபுணர்கள்.
உடலை ஆராதியுங்கள்
செக்ஸ் உறவின் போது இயந்திரத்தனமாக இயங்காமல் துணையின் உடலை ஆராதிக்க வேண்டுமாம். அப்பொழுதுதான் ஒருவருக்கொருவர் ஆசையும், ஆர்வமும் அதிகரிக்குமாம். அதேபோல் செக்ஸ் பற்றிய சந்தேகங்களை ஒருவருக்கொருவர் கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டுமாம். தங்களுக்கு தெரிந்த சில டிப்ஸ் மற்றும் டிரிக்ஸ்களை சொல்லித்தரவேண்டுமாம். முக்கியமாக செக்ஸ் உறவின் போது ஒருவருக்கொருவர் தன்னம்பிக்கையோடு செயல்பட வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் தயாராக இருந்தால் மட்டுமே உடலுறவில் ஈடுபடுங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.
ஒருவ‌ர் உட‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு இரு‌க்கு‌ம் போதோ, அ‌திக களை‌ப்படை‌ந்‌திரு‌ந்தாலோ அ‌ந்த சமய‌த்‌தி‌ல் உட‌ல் உற‌வி‌ற்கு அழை‌ப்பதை துணைவ‌ர் த‌வி‌ர்‌க்க வே‌ண்டு‌ம். அ‌ந்த சமய‌த்‌தி‌ல் உ‌ங்களது ஆதரவு‌ம், அ‌ன்பு‌ம் அவரு‌க்கு‌த் தேவை எ‌‌ன்பதை ‌நினை‌வி‌ல் கொ‌ள்ளவு‌ம்.
ரசனையோடு ஈடுபடுங்கள்
தாம்ப‌த்ய‌த்‌தி‌ல் வெறு‌ப்படை‌ந்த ‌நிலை‌யி‌ல் இரு‌ப்பவ‌ர்க‌ள் த‌ம்ப‌திக‌ள் ஒருவரு‌க்கொருவ‌ர் பே‌சி, ஒரு ‌சில நா‌ட்க‌ள், வார‌ங்க‌ள், மாத‌ம் என ஒரு கால‌க் க‌ட்ட‌த்தை ‌நி‌ர்ண‌யி‌த்து‌க் கொ‌‌ண்டு அதுவரை தா‌ம்ப‌த்ய‌ம் வை‌த்து‌க் கொ‌ள்வ‌தி‌ல்லை எ‌ன்று முடிவெடு‌ங்க‌ள். ஆனா‌ல், இ‌ந்த சமய‌த்‌தி‌ல் எ‌ல்லா‌ம் த‌னி‌த்த‌னியாக இரு‌ந்து ‌விடாம‌ல் ஒருவரை ஒருவ‌ர் ‌சீ‌‌ண்டி‌க் கொ‌ண்டிரு‌‌க்கலா‌ம். இதனா‌ல் தா‌ம்ப‌த்ய‌த்‌தி‌ன் ‌மீது ஒரு ஏ‌க்‌க‌ம் ‌பிற‌க்கு‌ம். ஒரு வேளை இ‌ந்த முய‌ற்‌சி‌யினா‌ல், கால‌க் கெடு வரை கா‌த்‌திரு‌க்க முடியாம‌ல் கூட ‌சில த‌ம்ப‌திக‌ள் த‌ங்களது தா‌ம்ப‌த்ய‌த்தை அனுப‌வி‌க்கு‌ம் ‌நிலை ஏ‌ற்படலா‌ம்.
எனவே எதையும் முழு ரசனையோடு‌ம், ஈடுபாட்டோடும் அ‌ன்போடு‌ம் செய‌ல்படு‌ங்க‌ள். உ‌ங்க‌ள் தாம்பத்ய வாழ்க்கையும் சந்தோசம் தழைத்தோங்கும் என்கின்றனர் நிபுணர்கள். துணை வா‌ழ்‌க்கை‌த் துணையாகு‌ம் எ‌ன்‌கி‌ன்றன‌ர் மரு‌த்துவ‌ர்க‌ள்.