Home பெண்கள் அழகு குறிப்பு செக்கச் சிவந்த உதட்டுக்கு என்ன செய்யலாம்?

செக்கச் சிவந்த உதட்டுக்கு என்ன செய்யலாம்?

24

captureஎல்லோருமே விரும்புவது சிவந்த உதடுகளைத்தான். ஆனால் நம்முடைய தினசரி பழக்க வழக்கங்களால் உதடுகளின் இயற்கையான நிறம் மங்கிவிடுகிறது. வெயிலில் நடத்தல், தூசிகள் படிதல், காபி அதிகமாக குடித்தல் ஆகிய காரணங்களால் உதடுகள் பிரௌன் அல்லது கருமையாக மாறிவிடுகிறது. இதை சரிசெய்ய பெரிதாக சிரமப்படத் தேவையில்லை. வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே மீண்டும் உதடுகளைக் கோவைப்பழம் போல் சிவப்பாக்க முடியும்.

ஒரு ஸ்பூன் சர்க்கரையும் ஒரு ஸ்பூன் வெண்ணெயையும் நன்கு கலந்து உதடுகளில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். சர்க்கரை, உதடுகளில் உள்ள இறந்த செல்களை நிக்குகிறது. வெண்ணெய் உங்கள் உதட்டின் பழைய நிறத்தை உங்களுக்கு மீட்டுத்தரும். இதை வாரத்தில் இரண்டு நாட்கள் செய்து வந்தால் விரைவில் அதன் மாற்றத்தை உணர்வீர்கள்.

நிறத்தை மீட்பதில் எலுமிச்சைக்கு ஒரு தனி இடமுண்டு. தினமும் சிறிதளவு எலுமிச்சை சாறினை உதட்டில் தடவி 5 நிமிடங்களுக்குப் பிறகு கழுவுங்கள். உங்கள் உதடுகள் பளிச்சிடுவதை நீங்களே உணர்வீர்கள்.

பால் ஒரு சிறந்த கிளன்சராகப் பயன்படும். சிறிதளவு பாலுடன் சிறிது மஞ்சள்தூள் சேர்த்து பேஸ்ட்டாக்கி, அதை உதடுகளில் அப்பை செய்து நன்கு ஊறவிடுங்கள். 10 நிமிடங்கள் கழித்து மென்மையான பிரஷ் கொண்டு, 15 நிமிடங்கள் வரை உதடுகளை நன்கு தேய்த்துக் கழுவவும். இப்படி செய்வதன் மூலம் நல்ல மாற்றத்தைப் பெறமுடியும்.

ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறுடன் இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து உதடுகளில் தடவி, விரல்களால் நன்கு மசாஜ் செய்யுங்கள். அப்படியே சிறிது நேரம் வைத்திருந்து பின்னர் குளிர்ந்த நீர் கொண்டு கழுவுங்கள். நிச்சயம் உங்கள் உதடுகள் பளபளக்கும்.

பீட்ரூட் மற்றும் ஸ்ட்ராபெரி இரண்டுமே கருமையைப் போக்கும் தன்மை கொண்டது. முதலில் பீட்ருட் ஜூஸை உதடுகளில் அப்ளை செய்து, 5 நிமிடங்கள்வரை உலரவிடுங்கள். அதன்பின் சுத்தம் செய்துவிட்டு, இரண்டு ஸ்பூன் ஸ்ட்ராபெரி ஜூஸ் மற்றும் ஒரு ஸ்பூன் பெட்ரோலியம் ஜெல்லியையும் சேர்த்து நன்றாகக் கலந்து உதடுகளில் தடவுங்கள். அது உதடுகளுக்கு சிறந்த மாய்ச்சுரைஸராக அமையும்.

ஆலிவ் ஆயில் வைட்டமின் மற்றும் மினரல் சத்துக்களைக் கொண்டது. இதைப் பயன்படுத்தும்போது, இயற்கையான நிறத்தை உங்களுக்கு மீட்டுத்தரும். அதனால் தினமும் இரவு தூங்கச் செல்லும்போது சில துளிகள் ஆலிவ் ஆயிலை அப்பை செய்துவிட்டு படுங்கள். அடுத்த நாள் காலை உதடுகளைக் கழுவுங்கள்.

இதுபோன்று வீட்டில் கிடைக்கும் இயற்கைப் பொருட்களைக் கொண்டு பராமரிப்பதுதான் நெடுநாட்கள் வரை நீடித்திருக்கும்.