மட்டன் – 1/2 கிலோ
வெங்காயம் – 1
தக்காளி – 4
[பாட்டி மசாலா] மிளகாய் தூள்- 2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
உப்பு
செய்முறை :
மட்டனை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
அடுத்து தக்காளி சேர்த்து வதக்கிய பின்னர் [பாட்டி மசாலா] மிளகாய் தூள், உப்பு, கழுவி வைத்துள்ள மட்டனை போட்டு 5 நிமிடம் நன்றாக கிளறவும்.
அடுத்து குக்கரை மூடி 6 விசில் போட்டு இறக்கி விசில் போனவுடன் மூடியை திறந்து மீண்டும் அடுப்பில் வைத்து மிதமான தீயில் சுருண்டு வரும் வரை வதக்க வேண்டும்.
ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கி பரிமாறவும்.
சூப்பரான விருதுநகர் மட்டன் மசாலா ரெடி.