:
வஞ்சிரம் மீன் – 1/4 கிலோ
எலுமிச்சை பழம் – 1
தக்காளி – 1
மிளகு – 2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
பூண்டு – 10 பல்
மஞ்சள் பொடி – 1/2 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் – 4
எண்ணெய் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கடுகு – 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது
செய்முறை
:
• மீனை நன்றாகக் கழுவி சற்று பெரிய துண்டங்களாகப் போடவும்.
• மிளகு, சீரகம், பூண்டை தட்டிக் கொள்ளவும்.
• தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• 4 கப் நீரில் எலுமிச்சை பழத்தை பிழிந்து இதில் தட்டிய மிளகு, சீரகம், பூண்டு, நறுக்கிய தக்காளி, உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
• நுரை வருவதற்கு சற்று முன்பாக மீன் துண்டங்களை சேர்க்கவும்.
• இரண்டு நிமிடத்தில் மீன் வெந்து மேலே மிதக்கும்.
• உடனே அடுப்பை அணைக்கவும். இல்லையென்றால் மீன் கரைந்து விடும்.
• எண்ணெயில் மிளகாய் வற்றலை சிறிது இடித்துச் சேர்த்து கடுகு தாளித்து சூப்பில் ஊற்றி கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
• சுவையான மீன் சூப் ரெடி.
• எலுமிச்சை பழத்திற்கு பதிலாக புளியை பயன்படுத்தலாம்.