பச்சரிசி – 1கப்
புழுங்கல் அரிசி – 1/2 கப்
உளுந்து – கால் கப்
நறுக்கிய தக்காளி – 1/4 கிலோ
காய்ந்த மிளகாய் – 6
வெங்காயம் – 1
உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப
செய்முறை :
* இரண்டு அரிசியையும், உளுந்தையும் 1 மணி நேரம் ஊறவைத்து அரைத்துக் கொள்ளவும்.
* ஒரு கடாயில் என்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி, காய்ந்த மிளகாய் போட்டு வதக்கி ஆற வைக்கவும்.
* ஆறியவுடன் மிக்சியில் அரைத்து மாவுடன் கலந்துக் கொள்ளவும்.
* தேவையான உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.
* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும மாவை மெல்லிய தோசைகளாக வார்க்கவும்.
* சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.
* சுவையான தக்காளி தோசை ரெடி.
* இதற்கு கார சட்னி தொட்டுக் கொள்ள அருமையாக இருக்கும்.
குறிப்பு :
* தோசை மாவு இருந்தால் அதையும் பயன்படுத்தி இவ்வாறு செய்யலாம்.
– உங்கள் கருத்துக்களை [email protected] என்ற இணையதள முகவரிக்கு