Home சமையல் குறிப்புகள் சுவையான சத்தான கேரட் சட்னி

சுவையான சத்தான கேரட் சட்னி

23

6437108f-64bd-442d-9317-cc2c398e500b_S_secvpfதேவையான பொருட்கள்:

கேரட் – கால் கிலோ

காய்ந்த மிளகாய் – 6

புளி – சிறிதளவு

கறிவேப்பிலை – சிறிதளவு

உளுத்தம் பருப்பு – 3 ஸ்பூன்

கொத்தமல்லி – சிறிதளவு

உப்பு – சுவைக்கு

கடுகு, உளுந்து – தாளிக்க

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

• வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பைச் வாசம் வரும் வரை சிவக்க வறுத்து, கொத்தமல்லி, கறிவேப்பிலை,

காய்ந்த மிளகாய், புளி எல்லாவற்றையும் போட்டு 2 நிமிடம் வரை வதக்கி ஒரு தட்டில் போட்டு ஆற வைக்கவும்.

• கேரட்டை தோல் சீவி சிறிய துண்டுகளாக வெட்டித் அதே வாணலியில் போட்டு 5 நிமிடங்கள் வரை வதக்குங்கள்.

• வறுத்த பொருட்கள் அனைத்தும் ஆறியவுடன் உப்பு சேர்த்து மிக்சியில் போட்டுத் தேவையான அளவு தண்ணீர் நன்றாக அரைத்து கொள்ளவும்.

• மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து அதில் அரைத்த கேரட் சட்னியில் கொட்டி 2 நிமிடம்

வதக்கி இறக்கிவிடவும்

• இப்போது சுவையான சத்தான கேரட் சட்னி ரெடி.