Home சமையல் குறிப்புகள் சுலபமாக செய்யக்கூடிய ஓட்ஸ் – கோதுமை ரொட்டி

சுலபமாக செய்யக்கூடிய ஓட்ஸ் – கோதுமை ரொட்டி

21

Captureதேவையான பொருட்கள் :

ஓட்ஸ் – 50 கிராம்
கோதுமை மாவு – 50 கிராம்,
வெங்காயம் – 30 கிராம்,
கொத்தமல்லி – சிறிதளவு
இஞ்சி – 10 கிராம்,
கறிவேப்பிலை – சிறிதளவு,
எண்ணெய் – 3 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

* கொத்தமல்லி, இஞ்சி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஓட்ஸ் மீல் மாவு, கோதுமை மாவு இரண்டையும் கலந்து வெந்நீர் விட்டு சிறிது உப்பு சேர்த்துப் பிசையவும். இதனால் மாவு நன்றாக மிருதுவாகிவிடும்.

* இதனுடன் நறுக்கி வெங்காயம், கொத்தமல்லி, இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து, சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி போல் இட்டு, தோசைக் கல்லில் போட்டு சுற்றிலும் எண்ணெய் விட்டு எடுக்கவும்.

* கொத்தமல்லி சட்னி, வெஜிடபிள் சாலட் போன்றவை இதற்கு சரியான சைட் டிஷ். இரவில் சாப்பிட மிகவும் ஏற்றது.