Home பெண்கள் தாய்மை நலம் சுக பிரசவத்திற்கு வழி வகுக்கும் பிராணாயாமம்

சுக பிரசவத்திற்கு வழி வகுக்கும் பிராணாயாமம்

28

f04ee858-e7d0-4934-8914-c36d74cf8397_S_secvpfகர்ப்பிணிகள் பிரசவத்தை எளிய, சுகமான அனுபவமாக மாற்ற பிராணாயாமம் செய்யலாம். கர்ப்பிணிகள் தகுந்த நிபுணரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலுடன் கவனமாக இந்தப் பயிற்சிகளைச் செய்ய வேண்டும். கையை மடித்துத் தலைக்கு வைத்தபடி (அல்லது சிறிய தலையணையை வைத்தபடி) ஒருக்களித்துப் படுக்கவும்.

ஒன்று அல்லது இரண்டு மிருதுவான தலையணைகளை வயிற்றின் அருகே வைத்து, அதன் மேல் காலைப் போட்டுக்கொண்டு ஆறுதலாக இருக்கலாம். கர்ப்பிணிகள் 5 மாதங்களுக்குப் பிறகு, தூங்கும்போது இதே நிலையில் தலையணை வைத்துக்கொண்டு படுத்தால், வயிறு அழுத்தாது. எவ்வித அசௌகரியமும் இல்லாமல், சுகமாகத் தூங்கலாம். காற்றோட்டமான இடத்தில், வசதியாக அமர்ந்து, பிராணாயாமம் செய்யவேண்டும்.
பிராணாயாமம் செய்யும் முறை சம்மணமிட்டு அமர்ந்து, இடது கையை சின் முத்திரையில் இடது முழங்காலின் மேல் வைத்துக்கொள்ளவும். வலது கையில், ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் மடக்கியபடி, கட்டை விரலால், வலது பக்க நாசியை அழுத்திக்கொண்டு, இடது பக்கம் மூச்சை வெளியேவிடவும். பிறகு, மோதிர விரலால் இடது நாசியை அழுத்தியபடி, வலதுபக்க மூக்கின் வழியாக மூச்சைவிடவும்.

இப்படியே ஒவ்வொரு நாசிக்கும் மூன்று முறை செய்த பிறகு, ஆரம்பித்த வலது நாசியிலேயே கடைசியாகச் செய்து முடிக்கவேண்டும். மூச்சுப் பயிற்சி ரொம்ப முக்கியம். எவ்வளவுக்கு பிராணாயாமம் செய்கிறார்களோ, அந்தளவு பிராணசக்தி அதிகரித்து, உடலின் சக்தி அதிகரிக்கும்.