Home சமையல் குறிப்புகள் சீரக மீன் குழம்பு

சீரக மீன் குழம்பு

29

nnn-3-300x200தேவையான பொருட்கள்:
மீன் – 400 கிராம்
சின்ன வெங்காயம் – 100 கிராம்
தக்காளி – 100 கிராம்
பச்சை மிளகாய் – 3
பூண்டு – 6 பல்
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
சீரகத்தூள் – 2 டீஸ்பூன்
புளி – சிறிய எலுமிச்சை அளவு
எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்
உ.பருப்பு, வெந்தயம், சீரகம் – தலா அரை டீஸ்பூன்
கொத்தமல்லி கறிவேப்பிலை – சிறிது
(விரும்பினால் தேங்காய் விழுது- 2 டேபிள்ஸ்பூன்)
செய்முறை :
* மீனை சுத்தம் செய்து நன்கு கழுவி தண்ணீர் வடிகட்டவும்.
* சின்ன வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும்
* தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
* வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம், உளுத்தம் பருப்பு, வெந்தயம் போட்டு தாளித்த பின் பச்சை மிளகாய், பூண்டு, கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
* அத்துடன் உரித்த சின்ன வெங்காயம், நறுக்கிய தக்காளி, சிறிது உப்பு சேர்த்து மசிய விடவும்.
* தக்காளி மசிந்து வரும் பொழுது மிளகாய்த்தூள், சீரகத்தூள் சேர்த்து பிரட்டவும்.
* அடுத்து அதில் புளித்தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் உப்பு, மீனை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.
* மீன் வெந்தவுடன் நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
* விரும்பினால் தேங்காய் சேர்த்தும் செய்யலாம். * சுவையான சீரக மீன் குழம்பு ரெடி.