Home சூடான செய்திகள் சிவப்பு நிறம்தான் ரொமான்ஸுக்கு சிறந்ததாம்

சிவப்பு நிறம்தான் ரொமான்ஸுக்கு சிறந்ததாம்

25

தலைப்பைப் படித்துவிட்டு யாரும் சூடாக வேண்டாம்!

பெண்கள் சிவப்பு நிறம்கொண்ட ஆடைகளை அணிவது ஆண்களை மயக்கி, அவர்களது காதல் உணர்வுகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

ஆண்களுடன் டேட்டிங் செல்லும்போது பெண்கள் சிவப்பு நிற ஆடைகளையே விரும்பி அணிகின்றனராம். அதுமட்டுமல்லாது ஆன்லைன் டேட்டிங்கிலும் சிவப்பு வண்ண நிற ஆடையுடன் பெண்கள் தங்கள் புகைப்படங்களைப் பதிவு செய்யும்போது அது அவர்களுக்கு வெற்றிகரமாக அமைகிறதாம்.

Red1
இதற்கு முன்னர் நடத்தப்பட்ட ஆய்வுகளில், பிற நிறங்களை விட சிவப்பு வண்ணத்தில் பெண்கள் ஆடையை அணியும்போது அது ஆண்களைக் கவர்கிறது என்று கண்டறியப்பட்டது. ஆனால் அது ஆண்களை ஈர்க்கும் எண்ண உணர்வில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது தெளிவற்றதாகவே இருந்தது.

ரோசெஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டேனியல் நீஸ்டா கெய்சர், ஆண்ட்ரூ ஜே.எலியட் மற்றும் ரோஜர் ஃபெல்ட்மென் மூவரும் இணைந்து சிவப்பு நிறம் ஆண்களின் நடத்தையில் என்ன மாதிரியான மாற்றத்தை உண்டு பண்ணுகிறது என்ற ஆய்வை நிகழ்த்தினர்.

அவர்கள் கல்லூரி மாணவர்கள் சிலரிடம், பெண்களின் புகைப்படங்களைக் கொடுத்து அவர்களின் கருத்தை அறிந்தனர். அதில் பிற வண்ணங்களை விட சிவப்பு நிற ஆடை அணிந்த பெண்ணிடமே அந்தரங்கமான கேள்விகள் கேட்க விரும்புவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். சிவப்பு மற்றும் நீல நிற ஆடை அணிந்த ஒரே பெண்ணின் வெவ்வேறு புகைப்படங்களை அவர்களிடம் கொடுத்தபோது, சிவப்பு நிறம் கொண்ட ஆடை அணிந்த போதே அந்த பெண்ணிடம் நெருங்கி அமர வேண்டும் போல தோன்றுவதாக தெரிவித்துள்ளனர்.

பல குரங்கினங்களிலும், பெண் துணை தனது இணையைக் கவர்வதற்காக குறிப்பிட்ட உடல் பகுதியை பார்ப்பதற்கு ஏதுவாக சிவப்பு நிறத்திற்கு மாற்றி, பாலியல் சமிக்ஞை கொடுக்கிறது.

“இந்த சிவப்பு விளைவு உயிரியல் அடிப்ப்டையிலான காரணங்களினால் ஏற்படுகிறது, மேலும் தொன்மைகாலத்திலிருந்தே பேசப்படும் சிவப்பின் குணங்களான காமம், ஈர்ப்பு மற்றும் உணர்ச்சி மற்றும் அழகுசாதனப் பொருட்கள் போன்ற சமூக கற்றல்கள் வாயிலாகவும் ஏற்படுகிறது” என்கின்றனர் கெய்சரும் அவரது சக ஆய்வாளர்களும்.