தேவையான பொருட்கள் :
o மைதா – 1 கப் (200 கிராம்),
o பெரிய வெங்காயம் – 1,
• குட மிளகாய் – 1,
• மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி,
• சோயா சாஸ் – 1 தேக்கரண்டி,
o தக்காளி சாஸ் – 3 தேக்கரண்டி,
• சிவப்பு கலர் கேசர் பவுடர் – 1/2 தேக்கரண்டி,
• இஞ்சி-பூண்டு விழுது – 1 தேக்கரண்டி,
• எண்ணெய் – 2 மேசைக்கரண்டி,
• சர்க்கரை – 1 தேக்கரண்டி,
• உப்பு – தேவையான அளவு.
செய்முறை :
* வெங்காயம், குட மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கி உதிர்த்து வைக்கவும்.
* மைதாவை சிறிது உப்பு, ஒரு தேக் கரண்டி எண்ணெய் சேர்த்து, சப்பாத் திக்கு பிசைவது போல் பிசைந்து, அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
* ரொம்ப மெலிதாகவோ, மொத்த மாகவோ இல்லாமல் சப்பாத் திகளாக தே ய்த்து, நான்காக மடித்து தேய்த்து வைக்கவும்.
* தோசைக்கல்லை காய வைத்து, சப் பாத்திகளை சிவக்காமல், இருபுறமும் வெள்ளையாக இருப்பது போல் சுட்டு எடுக்கவும்.
* சுட்ட சப்பாத்திகளை சதுர துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
* வாணலியில் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம், குட மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
* வதக்கும் போதே மிளகாய் தூள், சிவப்பு கலர் கேசரி பவுடர், சோயா சாஸ், தக்காளி சாஸ், சர்க்கரை, உப்பு சேர்த்து வதக்கவும்.
* நன்கு வதங்கியதும், நறுக்கிய சப்பாத்தி துண்டுகளை சேர்த்து, ஒரு கை தண்ணீர் தெளித்து, நன்கு கிளறி இறக்கவும்.