Home ஆரோக்கியம் பொது மருத்துவம் சிலர் படுத்தவுடன் நன்கு உறங்கிவிடுவார்கள், அதற்கு இவையெல்லாம் தான் காரணம்!

சிலர் படுத்தவுடன் நன்கு உறங்கிவிடுவார்கள், அதற்கு இவையெல்லாம் தான் காரணம்!

16

man-sleepingஉலகிலேயே எவன் மிகவும் நிம்மதியாக இருக்கிறான் என்பதை அவன் உறங்குவதை வைத்தே சொல்லிவிட முடியும். உறக்கமற்றவன் என்றும் நிம்மதியாக இருந்ததில்லை. தொழில்நுட்ப வளர்ச்சி, உயர்பதவி என சில காரணங்கள் கூறி, அதனால் தான் சரியாக உறங்குவதில்லை என சிலர் குற்றம் கூறலாம். ஆனால், நமது அன்றாட வாழ்வில் நாம் செய்யும் தவறுகள் தான் நமது உறக்கத்தை கெடுக்கிறது.
நம்மை போலவே வேலை செய்யும் சிலர் நன்கு உறங்குவார்கள், படுத்ததும் சில நிமிடங்களில் உறங்கிவிடுவார்கள். நமக்கு மட்டுமின்றி அவர்களுக்கு மட்டும் எப்படி இது சாத்தியமாகிறது? என்ற கேள்வி பலருக்கு எழலாம். அதற்கு நீங்கள் சிலவற்றை அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்….
பவர் ஆப்
தங்களது ஸ்மார்ட் போன், லேப்டாப், கம்ப்யூட்டர் போன்ற மின்னணு சாதனங்களை இரவு முன்கூட்டியே ஆப் செய்து வைத்துவிடுவார்கள். மேலும் இவர்கள் தங்கள் அறையில் உறங்கும் அரை மணிநேரத்திற்கு முன்பாகவே விளக்குகளையும் ஆப் செய்துவிடுகிறார்கள்.
சரியான நேரம்
தினமும் சரியான (அ) ஒரே நேரத்தில் உறங்க செல்லும் பழக்கம் அவர்களுக்கு இருக்கிறது. இது தன்னைப்போல் அந்த நேரத்தில் தினமும் அவர்களுக்கு உறக்கம் வர காரணமாக இருக்கிறது.
குளுமையான அறை
நல்ல உறக்கம் வேண்டும் எனில், உங்கள் படுக்கையறை வெப்பமாக இருக்க கூடாது. இது உடலை அசௌகரியமாக உணர செய்கிறது. எனவே, அறையை குளுமையான வைத்துக் கொள்ளுங்கள்.
ஆல்கஹால் இல்லை
இரவு மது அருந்தும் பழக்கம் இருப்பவர்களுக்கு சரியான தூக்கம் வராது. மேலும் காலை அசதியாக இருக்கும். நன்கு உறங்குபவர்கள் இரவில் அதிகம் குடிப்பதில்லை.
இலகுவான உணவு
நன்கு உறங்கும் பழக்கம் உடையவர்கள், இரவு கடினமான உணவை எடுத்துக் கொள்வதில்லை. செரிமானத்திற்கு இலகுவான உணவை தான் உட்கொள்கிறார்கள். இதுவும் அவர்கள் நன்கு உறங்குவதற்கு ஓர் முக்கிய காரணியாக இருக்கிறது.
மறந்துவிடும் எண்ணம்
இரவு நன்கு உறங்குபவர்கள், அவர்களது கவலைகளை படுக்கையறைக்கு எடுத்து செல்வதில்லை.
அதிகாலை உடற்பயிற்சி
மேலும் இரவு நன்கு உறங்குபவர்கள், அதிகாலை எழுந்து உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை கொண்டிருக்கிறார்கள். இது உடலில் இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. இதுவும், இரவு நல்ல உறக்கம் வர ஓர் முக்கிய காரணியாகும்.
உடல் வேலை
இது தான் மிகவும் முக்கியமான காரணம். நன்கு உறங்கும் நபர்கள், தினமும் அவர்களது உடலுக்கு வேலை தருகின்றனர். வெறுமென, கணினி, டிவி, மொபைல் முன்னே அமர்ந்து நாட்களை கழிப்பதில்லை. நமது வீட்டில் எவ்வளவு நேரம் கழித்து படுக்க போனாலும், உடனே உறங்குபவர் அம்மா தான். ஏனெனில், அவர் தான் பெரும்பாலும் நமது வீட்டில் அதிகம் உடலுக்கு வேலை கொடுத்து பணிபுரியும் நபர்.