சிறியோர், பெரியோர் என்ற வேறுபாடின்றி எம்மில் பலரும் தமது வாழ்நாளில் ஒரு முறையேனும் சிறுநீரக தொற்றுக்கு ஆளாகி இருப்பர்.
பலர் அச்சம் காரணமாக மறைத்து விடுவர். ஒரு சிலரே தமக்கு ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்து கொள்வர்.
இது சிறுநீர் துவாரத்தில் ஏற்படும் நோய் என்பதனால் பலர் நோயின் ஆரம்பநிலையில் இது பற்றிய அறிகுறிகளை வெளிப்படையாக வைத்தியருடன் ஆலோசிக்க வெட்கப்படுகின்றனர்.
இதனால் இந்நோய் தாக்கத்தின் தீவிர தன்மையான சிறுநீரக பாதிப்பிற்கு ஆளாக நேரிடும் என்கிறார் னிய வைத்திய நிபுணர்
சிறுநீரக தொற்று என்றால் என்ன?
எமது உடலில் கழிவாக வெளியேற்றப்படும் சிறுநீரில் வளரக்கூடிய நுண்ணங்கிகளின் தாக்கத்தால் சிறுநீர் கால்வாய் மற்றும் ஆண்குறி, யோனி என்பவற்றில் ஏற்படக்கூடிய பாதிப்புக்களே சிறுநீரக தொற்றாகும். இதை வைத்தியர்கள் UIT என்பர் (Urinary Tract Infection)
Urinary Tract Infection ஏற்படக் கூடிய வயதெல்லை உண்டா? யாரை எல்லாம் அதிகம் பாதிக்கும்?
சிறியோர் முதல் வயோதிபர்கள் வரை அனைவரையும் இந்நோய் தொற்றக் கூடியது. பொதுவாக பெண்களே அதிகளவில் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். சிறுநீரகக் கல் உள்ளோர் புராஸ்டேப் சுரப்பி விரிவடைந்தோரையும் அதிகம் தாக்கும்.
பெண்களுக்கு இத்தொற்று அதிகளவில் ஏற்படுவதற்கான காரணம் என்ன?
சிறுநீரகத்தில் இருந்து சிறுநீர் வெளியேறும் துவாரம் வரையிலான தூரத்தை கொண்டே சிறுநீரக தொற்றின் தீவிரத்தன்மை வெளிக்கொணரப்படும். ஆண்களில் சிறுநீரகம் தொடக்கம் சிறுநீர் வெளியேறும் துவாரம் வரையிலான தூரம் 12cm தொடக்கம் 15cm வரையில் காணப்படும்.
அதே பெண்களில் 2.5cm தொடக்கம் 3.5cm வரையிலேயே காணப்படும். எனவே, தொற்று ஏற்பட்ட, பட்சத்தில் பெண்களில் பரவும் தூரம் குறைவு என்பதனால் சிறுநீரகம் பாதிக்கப்படும் அளவு அதிகம்.
சிறுநீரக தொற்று ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்கள் எவை?
சிறுநீரக தொற்றானது பொதுவாக வெளியே இருந்து பிறப்புறுப்பின் வழியே உட்செல்லும் நுண்ணங்கிகளாலேயே அதிகம் ஏற்படுகின்றது. சிலருக்கு மலக்குடலில் காணப்படும் E coll எனும் நுண்ணங்கி சிறுநீரக பாதைக்கு வருவதனாலும் ஏற்படலாம்.
நுண்ணங்கிகள் உற்செல்லக்கூடிய சந்தர்ப்பங்களாக கருதப்படுபவை:
*பிறப்புறுப்பை சுத்தமாக வைத்திருக்காமை
*மாதவிடாய் காலங்களில் தரமான நெப்கின்களை உபயோகிக்காமை
*சிறுநீர் கழித்தபின் உறுப்பை சுத்தம் செய்யாமை
*கழிவறைகளின் அசுத்தத் தன்மையால்.
சிறுநீரக தொற்றுக்கான அறிகுறிகள் எவை?
சிறுநீர் வெளியேறும் அளவு குறைதல், சிறுநீர் கழிக்கையில்
எரிச்சல்/ வலி ஏற்படல்,
யோனிமடல்/ ஆண்குறியை சுற்றி தோல் அலர்ஜி, அரிப்பு ஏற்படல் என்பவை பொதுவான அறிகுறிகளாகும்.
சிலருக்கு இடுப்பு, அடிவயிற்றில் வலி ஏற்படலாம். மேலும் UIT ஆல் அதிகம் பாதிக்கப்பட்ட நிலையில் குளிர்காய்ச்சல் ஏற்படலாம்.
சிறுநீர்க் குழாய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் அறியக் கூடிய பரிசோதனைகள், சிகிச்சை முறைகள் எவை?
பொதுவாக UFR (Urine Full Report) செய்யப்படும். இதில் வெள்ளை, சிவப்பு அணுக்களின் அளவு அதிகமாக காணப்படுமாயின் வைத்தியரின் அறிவுறுத்தலுக்கு அமைய இரண்டு அல்லது மூன்று நாட்கள் மருந்து மாத்திரைகளை பாவிப்பதன் மூலம் தொற்றில் இருந்து விடுபடலாம்.
மேலும் Urine Full reportஇல் Organs, Crustle என்பன காணப்படுமாயின், Urine Culture and ABST எனும் சிறுநீர் பரிசோதனையை செய்யவேண்டும். இதன் மூலம் நோய் தொற்றானது உள்ளிருந்து உருவானதா அல்லது வெளிக்காரணிகளால் ஏற்பட்டதா என்பதை அறிந்து அதற்கமைய பிரதியுபகாரம் செய்யவேண்டும்.
கர்ப்பிணி தாய்மார்களுக்கு UTI அதிகளவில் ஏற்படும். இவர்களுக்கு அதிகளவிலான மருந்து மாத்திரைகளை பரிந்துரை செய்ய முடியாது. எனவே, நரம்புவலி மருந்தேற்றல் மூலம் நோய் தொற்று நிலையை குறைத்து கட்டுப்படுத்தலாம்.
UTI ஆல் தோலில் (பிறப்புறுப்பில்) அலர்ஜி ஏற்பட்டிருப்பின் அதற்கு தனியான சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
சிலருக்கு மருந்து மாத்திரைகளின் உபயோகத்தினால் சிறுநீர் கழிக்கையில் கடுக்கும் நிலை ஏற்படலாம். அதற்கான காரணம் என்ன?
உடலில் ஏற்படும் வெப்பநிலை அதிகரிப்பே இதற்கான காரணம். மருந்து பாவனையால் மாத்திரமன்றி சரியான உணவு முறை இன்மை, காலநிலை மாற்றம் காரணமாகவும் யோனி, ஆண்குறியில் சிறுநீர் கழிக்கையில் எரிச்சல், வலி, கடுப்பு ஏற்படலாம்.
எவ்வகையான உணவுகளை எமது உணவு வேளையில் சேர்த்துக்கொள்வதால் இந்நோய் தாக்கத்தை குறைக்கலாம்?
காரம், புளிப்புச்சுவை அடங்கிய உணவுகளை தவிர்த்துக் கொள்ளலாம். கோழி இறைச்சி, அவித்த முட்டை, இறால், நண்டு போன்ற உடல் சூட்டை அதிகரிக்கும் உணவுகளை குறைக்கவேண்டும்.
வெள்ளரிக்காய், பாகற்காய், முள்ளங்கி, கொகிலை, வாழைத்தண்டு, வாழைப்பூ என்பவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.
தயிர், இளநீர் என்பன சிறந்தவை. வெளியில் சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டிருந்த எம்மில் பலருக்கு UIT பற்றிய தெளிவை பெற்றுக் கொள்ள முடியும்.