Home அந்தரங்கம் சிறந்த உறவில் இருக்க வேண்டிய அடிப்படை விஷயங்கள்!

சிறந்த உறவில் இருக்க வேண்டிய அடிப்படை விஷயங்கள்!

30

antharanga kelvi, antharangam, tamil kama sutra, Tamilsex.com, tamilsex.com, www. tamil sex.com, tamil doctor, tamil kama kathaikal, tamil sex, tamil sex kathaikal, tamil sex padangal. tamil sex videos,tamilxdoctor, tamil x doctor, Tamil X doctor,நமது வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்திலும் பிறரை சார்ந்தே வாழ்ந்து வருகிறோம். அப்படி இருக்கும் போது, அந்தந்த உறவுக்கு உரியோரை முறையாக பேணுதல் அவசியம். அது நமக்கு மட்டுமல்லாமல், அடுத்தவருக்கும் வாழ்வியலில் மேம்பாட்டை வழங்குகிறது. ஒரு முறை இருமுறை என்றில்லாமல் தொடர்ந்து, நமது வாழ்வில் அடுத்தவருக்கு இடம் கொடுத்து, அவரது வாழ்வில் சிறந்த இடம் பெற்று இருக்க வேண்டும். அதுவே சிறந்த உறவுகளுக்கான நல்ல அறிகுறி. அவ்வாறான உறவுகள் அந்த இருவரையும் தாண்டி, சமூக முன்னேற்றத்திற்கும் வித்திடும். பொதுவாக ஒரு உறவானது மிகவும் மகிழ்ச்சியுடன் தொடங்குகிறது.

அந்த உறவை ஒரு நல்ல உறவாக பராமரிக்க வேண்டியது சம்மந்தப்பட்ட இரு தரப்பின் கடமை. ஒருவருக்கொருவர் நல்ல விதமாக உறவுமுறையை வைத்து கொள்வதற்கு சில குறிப்புகள் உள்ளன. அதில் அர்ப்பணிப்பு, பரஸ்பர காதல், நம்பிக்கை மற்றும் மரியாதை ஆகியவை அடங்கும். மேலும் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளுதலும், ஒற்றுமையாய் இருத்தலும் முக்கியம். இப்போது அந்த அழகான உறவுக்கென்று இருக்கும் அடிப்படையான சில விஷயங்களைப் பற்றி பார்ப்போமா!

உறவுக்கான அடித்தளம்

ஒரு நல்ல உறவை ஆரம்பித்த பின், அதற்கு ஒரு வலிமையான அடித்தளம் அமைக்க வேண்டும். அதிலும் அந்த அடித்தளத்தை நம்பிக்கை மற்றும் நேர்மை கொண்டு உருவாக்க வேண்டும்.

கடந்த கால நினைவுகள்

ஒவ்வொருவருக்கும் எதிர்காலத்தில் தேவையில்லாத கடந்த கால நினைவுகள் இருக்கும். அவற்றை எல்லாம் எதிர்காலத்திற்கு எடுத்து செல்ல கூடாது. அதிலும் முக்கியமான ஒன்று என்னவென்றால், கணவர்/மனைவியிடம் அதை பற்றி முழுவதுமாக கூறி விட வேண்டும் அல்லது முழுமையாக மறைத்து விட வேண்டும்.

புரிதல்

ஒரு உறவு என்பது புரிதலுடன் செல்லக்கூடிய முடிவில்லா பயணம் ஆகும். உங்களது அன்புக்குரியவர் பற்றி நீங்கள் புரிந்து கொள்ளாத விஷயம் நிச்சயம் ஏதேனும் ஒன்றாவது இருக்கும். எனவே நல்ல புரிதலுடன் இருப்பதே நல்ல உறவைப் பலப்படுத்தும்.

தொடர்பு

ஒரு நல்ல உறவை உருவாக்குவது தடையற்ற தொடர்பு தான். ஆகவே அன்புக்குரியவரிடம் தொடர்ந்து உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளை பகிர்ந்து கொண்டால், அந்த உறவானது ஆரோக்கியமாக செல்லும்.

மரியாதை

முக்கியமாக அன்புக்குரியவரின் உணர்வுகள் மற்றும் ஆசைகளை மதிக்க வேண்டும், மேலும் அவர்களை எவ்வித மாற்றமும் இல்லாமல், அவர்களாகவே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

மன்னிப்பு

இவ்வுலகில் எல்லா விதத்தில் மிக சரியாக இருக்கும் ஒருவர் என்று எவரும் பிறக்கவில்லை. ஆகவே அன்புக்குரியவர் செய்யும் முக்கியமற்ற பிழைகளை, தவறுதலாக செய்த விஷயங்களை மன்னித்து மறக்க வேண்டும். குறிப்பாக மன்னிக்கும் போது, அவற்றை எந்நேரத்திலும் சொல்லிக் காண்பிக்கக்கூடாது.

நட்பு

நல்ல ஆரோக்கியமான உறவில் நல்ல நட்புறவுடன் இருத்தல் மிகவும் அவசியம். இதனால் இது உறவை வலுபடுத்த உதவும்.

எல்லைகள்

அன்புக்குரியவருக்கு எவ்வளவு தான் மிகவும் முக்கியமானவராக இருந்தாலும், உங்களுக்கென்று எல்லைகளை வகுத்து கொள்ள வேண்டும். உங்கள் அன்புக்குரியவரின் எல்லைகளையும் மதிக்க வேண்டும். அவ்வாறு இருப்பது உங்கள் தனித்துவத்தை காண்பிக்க உதவும்.

தனிமை

ஒவ்வொருவருக்கும் தனிமை மற்றும் இடைவெளி இருக்க வேண்டும். ஆகவே ஒருவருக்கொருவர் அவரது விருப்பங்களை மதித்து இடைவெளி கொடுத்து, அவர்கள் புதிய பழக்கங்களை வளர்த்து கொள்ள நேரம் கொடுக்க வேண்டும்.

விசுவாசம்

நல்ல உறவில் மிக முக்கியமான அடித்தளம் விசுவாசம் ஆகும். அது இல்லாமல் எந்த உறவும் நீடிப்பதில்லை. அன்பும், மரியாதையும் அடிப்படை ஆதாரமாக கொண்ட உறவுக்கு விசுவாசம் அதிமுக்கியம்.

எதுவாக இருந்தாலும் கேட்டுச் செய்ங்க!

பெரும்பாலான பெண்கள் படுக்கையறையில் தங்களின் கணவரிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை அறிந்த கொள்ள முடிவதில்லை. இதன் காரணமாகவே பிரச்சினைகள் எழுகின்றன. மனைவியின் விருப்பங்களை நிறைவேற்ற கணவன் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை தெரிவித்துள்ளனர் பாலியல் நிபுணர்கள்.

மென்மையாய் கசியும் இசை

படுக்கையறையில் இசைக்கு தனித்தன்மை உண்டு. நீல ஒளி உமிழும் படுக்கையறையில் மென்மையான இசையை கசியவிட்டால் அது பெண்களுக்கு மிகவும் பிடிக்குமாம். அதீத ஒலி எழுப்பும் இரைச்சலான இசையை ஒலிபரப்ப வேண்டாம். அது சிக்கலை ஏற்படுத்திவிடும் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் படுக்கையறையின் முக்கிய எதிரியே செல்போன்தான். எனவே படுக்கையறைக்கு செல்லும் முன் செல்போனை ஆஃப் செய்ய வேண்டியதுதான் முதல் பணி. இல்லையெனில் படுக்கையறையில் தொண தொணக்கும் செல்போன் ஒலியும், அதை தொடர்ந்து உங்களின் பேச்சும் மனைவிக்கு எரிச்சலை ஏற்படுத்திவிடுமாம். பிறகு என்ன செய்தாலும் சமாதானப்படுத்த முடியாது என்கின்றனர் உளவியலாளர்கள்.

அனுமதி அவசியம்

தனக்குரிய பெண்ணாய் இருந்தாலும் அனுமதி பெறவேண்டியது அவசியம் என்று பெண்கள் எதிர்பார்க்கின்றனர். இன்று உன்னை முத்தமிடலாமா? இன்று உனக்கு சம்மதமா? இப்படி ஏதாவது கேட்டு வைப்பது நல்லது என்கின்றனர் உளவியலாளர்கள்.

தொடக்கம் போல இறுதி

முத்தம் என்பது உறவுக்கான திறவுகோல் என்பார்கள். நெற்றியில் தொடங்கி கண்கள், கண்ணம், முகவாய், இதழ் என படிப்பாய் உற்சாகப்படுத்த வேண்டும் என்றும் எதிர்பார்ப்பார்கள். தொடக்கத்தைப்போலவே முடிவிலும் முத்தம் வேண்டும் என்பது பெண்களின் எதிர்பார்ப்பு. சுவாசப் புத்துணர்ச்சியோடு முத்தம் தரவேண்டும்.

செல்லப் பெயர் சூட்டுங்கள்

படுக்கையறையில் செல்லப் பெயர் வைத்து அழைக்க வேண்டும் என்றுதான் அநேகம் பேர் எதிர்பார்க்கின்றனராம். தேவையில்லாத பேச்சுக்களை விடுத்து செல்லமாய் கொஞ்சவேண்டும். உடலை வருடவேண்டும், கொண்டாட வேண்டும் என்றுதான் பெரும்பாலான பெண்கள் எதிர்பார்க்கின்றனராம்.

பெண்களுக்கு மூட் இல்லை என்றால் கவலை வேண்டாம். உங்கள் கைகளால் இதமாக பற்றி மென்மையாய் தலையை வருடுங்கள். அந்த இதமான வருடல் பெண்மையின் மென்மையை கிளறச்செய்யும்.

திருப்தியுறச் செய்யுங்கள்

ஆண்களின் ஆசை சில நிமிடங்களில் முடிந்துவிடும். ஆனால் பெண்கள் அப்படியல்ல. சில முத்தங்கள், சில நிமிட ஸ்பரிசம் அதனால் ஏற்படும் கிளர்ச்சியோடு சிலநிமிடங்களில் ஏற்படும் உச்சநிலை என ஒரு தொடர்கதையாக நிகழும். எனவே திருப்தியுறும் வரை அவர்களுக்கு தேவையானவைகளை செய்யவேண்டும் என்கின்றனர் உளவியலாளர்கள்.

வாக்குவாதம் வாழ்க்கைக்கு ஆகாது!

எப்ப பார்த்தாலும் சண்டைதான், எதற்கெடுத்தாலும் வாக்குவாதம் வீட்டில் நிம்மதியே இல்லை என்று புலம்புபவரா நீங்கள். உங்களுக்குத்தான் இந்த கட்டுரைஸ தம்பதியரிடையே இணக்கம் ஏற்படவும், குடும்பத்தில் அமைதி நிலவவும் எதற்கெடுத்தாலும் வாக்குவாதம் செய்வதை தவிர்க்கவேண்டும் என்கின்றனர் உளவியலாளர்கள்.

அவமதிப்பது ஆபத்து

பேச்சுவார்த்தை சின்னதாக தொடங்கும்போதே அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வழியை தேடவேண்டும். அதை விடுத்து ஒருவருக்கு ஒருவர் எதிர்பேச்சுப் பேசி அவமதிக்கும் வகையில் பேசுவது மிகச்பெரிய பிரச்சினைக்கு வழி வகுக்கும். எனவே பேசிய பின்னர் இப்படி பேசி விட்டோமே என்று நினைத்து வருந்துவதை விட எதையுமே பேசும் முன்பு யோசித்து பேசுவது இருவருக்குமே நல்லது.

உண்மையை கண்டறியுங்கள்

கண்ணால் காண்பதும் பொய், காதல் கேட்பதும் பொய் எனவே உங்கள் துணைவரைப் பற்றி உங்களுக்குத்தான் முழுதாக தெரிந்திருக்க வேண்டும். உங்க வீட்டுக்காரரை அங்கே பார்த்தேனே என்று பக்கத்தில ஒரு பொண்ணு இருந்திச்சே என்று யாராவது கொளுத்திப் போட்டால் அதையே சாக்காக வைத்து வீட்டுக்கு வந்த உடன் குடையக்கூடாது. அவராக ஏதாவது சொல்கிறாரா என்று அமைதி காக்கவும். இல்லையா வேறு டாபிக் ஏதாவது பேசிவிட்டு அதோடு சேர்த்து மெதுவாக கேட்கவும். அப்புறம் சண்டைக்கு ஏது வழி? எது உண்மை என்று தெரிந்து கொண்டால் மகிழ்ச்சியான ஆரோக்கியமான வாழ்க்கை உங்களுடையதுதான்.

முயலுக்கு மூன்று கால்

எப்பொழுதுமே நீங்கள் சொல்வதுதான் சரி என்று நினைக்காதீர்கள். உங்கள் பக்கம் தவறு நேரவும் வாய்ப்பு உள்ளது. எனவே வாழ்க்கைத்துணையானவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை காது கொடுத்து கேளுங்கள். ஈகோ என்பது குடும்பத்திற்குள் எட்டிப்பார்க்க ஆரம்பித்தால் மகிழ்ச்சி என்பது காணமல் போய்விடும். அப்புறம் யார் பெரியவர், யார் சொல்வது சரி என்று எப்போதும் வாதம் செய்யவேண்டியதுதான். நம்முடைய வாழ்க்கை மற்றவர்களுக்கு வேடிக்கையாகிவிடும்.

தினமும் எழுதுங்கள்

அன்றாடம் நடந்தவைகளை தினமும் எழுதுங்கள். அலுவலகமோ, வீடோ, எங்கே என்ன நடந்தது என்பதை எழுதி துணையின் பார்வைக்கு வைக்கலாம். அவர் அணிந்திருந்த உடை அழகாயிருந்தால் அதையும் கவிதையாய் குறிப்பிடலாம். தேவையற்ற பேச்சுக்கள் குறையும். உங்கள் செயல் யோசிக்க வைக்கும். சிறிய தவறென்றாலும் விட்டுக்கொடுத்துப் போங்கள். அப்புறமென்ன நீங்கள் தான் ஆதர்ச தம்பதிகள்.

நோ அட்வைஸ், நோ ரூல்ஸ்!

தம்பதியருக்கிடையே புரிதல் இல்லாத காரணத்தினாலே சில ஆண்டுகளுக்குள்ளாகவே பிரிவுகள் ஏற்படுகின்றன. என்னை புரிஞ்சிக்கவே மாட்டேங்கிறா என்று கணவனும், நான் என்ன செய்தாலும் பிடிக்க மாட்டேங்குது என்று மனைவியும் புலம்பத் தொடங்கிவிடுகின்றனர். உணர்வுப் பூர்வமாக கணவரை புரிந்து கொண்டு மகிழ்ச்சிப்படுத்த உளவியல் வல்லுநர்கள் கூறும் சில ஆலோசனைகள்

புரிதல் வேண்டும்

நம்மை நாம் புரிந்து கொள்வது ஒரு புறம் இருக்கையில், திருமணம் செய்து கொண்டுள்ள கணவரைப் பற்றியும், அவருக்கு பிடித்தமானவைகளையும், புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுவது சற்று சிரமமான காரியம்தான். ஆண்கள் என்பவர்கள் வெளியில் சூரப்புலிகளாக செயல்பட்டாலும் வீட்டைப் பொருத்தவரை அம்மாபிள்ளைகளாகவோ, மனைவியின் முந்தானையை பிடித்துக்கொண்டோதான் இருக்க நினைப்பார்கள். எனவே முதலில் கணவரின் மனதை படியுங்கள். அவருக்கு பிடித்தமான விசயங்கள் என்பதை தெரிந்துகொண்டு அதன்படி நடந்து கொள்ளுங்கள். அப்புறம் பிரச்சினை எப்படி வரும்?

மனதை வருடும் பேச்சு

உளப்பூர்வமாகவும், உணர்வுப் பூர்வமாகவும் ஆண்களின் மனதை பெண்களின் அருகாமைக்காக ஏங்கும். எனவே தினசரி சில மணிநேரங்கள் உங்களுக்காக ஒதுக்குங்கள். இருவரும் மனம் விட்டு பேசுங்கள். கணவரின் அருகில் அமர்ந்து பத்திரிக்கையில் படித்த துணுக்கு, புதிதான ரிலீஸ் ஆன திரைப்படம் பற்றிய விமர்ச்சனம், பக்கத்து வீட்டு சமாச்சாரம் எதைப்பற்றி வேண்டுமானலும் இருக்கட்டும். பேசினால் தகவல் பரிமாற்றத்தோடு அன்றைய நிகழ்வுகள் உடனுக்குடன் தெரிகிறது என்ற நினைவு ஆண்களுக்கு ஏற்படும். பேச்சோடு பேச்சாக உறவுகளைப் பற்றியும், குழந்தைகளைப் பற்றியும் பேசலாம். கணவர் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை இந்த சூழ்நிலையில் தெரிந்து கொள்வது எளிது.

திருப்தி அடையச் செய்யுங்கள்

திருமணத்திற்குப் பின்னர் ஆண், பெண் இருவருக்கு இடையேயும் உடல் ரீதியான தேவைகளையும், உள ரீதியான ஆறுதல்களையும் எதிர்பார்ப்பது இயல்பு. எனவே இருவரும் ஒருவருக்கொருவர் புரிந்து அவரவர்களின் தேவைகளை நிறைவேற்ற ஒத்துழைக்கும் பட்சத்தில் பிரச்சினை எழ வாய்ப்பில்லை. ஆண்களுக்கு உணர்வு பூர்வமான தேவைகள் அதிகம் இருக்கும். எனவே பெண்கள் அதனை புரிந்து நடந்து கொள்வது ஆண்களை மகிழ்ச்சியுறச்செய்யும் என்கின்றனர் உளவியலாளர்கள்.

மனதில் நினைத்தால் தெரியாது

தம்பதியர் தங்களின் தேவைகளை வெளிப்படையாக தெரிவிக்கவேண்டும். அப்பொழுதுதான் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ஏனெனில் மனதில் நினைத்தால் அதை அனைவராலும் புரிந்து கொள்ள முடியாது எனவே தன்னுடைய தேவைகளை மனைவிக்கு தெரிவிக்க வேண்டும் என்றும், கணவரிடம் கேட்டுப் பெறுவதில் மனைவியும் கெட்டிக்காரத்தனத்துடன் நடந்து கொள்ளவேண்டும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

நோ அட்வைஸ், நோ ரூல்ஸ்

தம்பதியருக்கிடையே சட்டதிட்டங்கள் வகுத்து அதற்கேற்ப வாழவேண்டும் என்ற அவசியம் இல்லை. அதேபோல் எதற்கெடுத்தாலும் அட்வைஸ் செய்வது எரிச்சலை ஏற்படுத்தும் என்கின்றனர் உளவியலாளர்கள். கணவரின் செயல்களை எப்போதும் விமர்ச்சிப்பதும் உறவுகளை பாதிக்கும்.

மிகச்சிறந்த நபர்

கணவரின் காயங்களுக்கு ஆறுதல் தரும் மிகச்சிறந்த நபர் என்பதை உணர்த்துவதும், புரியவைப்பதும் மனைவியின் கடமை. அவரின் உணர்வுப் பூர்வமான தேடல்களுக்கு வடிகாலாக இருக்கவேண்டியதும் மனைவிதான். எனவே அதை நினைவில் வைத்துக்கொண்டு கணவரை அணுகவேண்டும். அதைவிடுத்து எடுத்ததற்கெல்லாம் சந்தேகப்படுவதும், தேவையற்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்று உளவியலாளர்கள் கூறுகின்றனர். எனவே கணவரின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அதற்கேற்ப நடந்துகொண்டால் இல்லறத்தில் பிரிவு ஏற்பட வழியில்லை என்கின்றனர் உளவியல் வல்லுநர்கள்.