Home குழந்தை நலம் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளை எப்படி சமாளிக்கலாம்?

சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளை எப்படி சமாளிக்கலாம்?

20

குழந்தைகள் சாப்பிட அடம்பிடித்தால், அவர்களை சாப்பிட வைப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிடும். பெரியவர்கள் என்றால் போனால் போகட்டும் என்று விட்டுவிடலாம். ஆனால் குழந்தைகளை அப்படி விடவும் முடியாது.

அப்படி அடம்பிடிக்கும் குழந்தைகளை சமாதானப்படுத்தி எப்படி சாப்பிட வைக்கலாம்?…

சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு சில அம்மாக்கள் ஜூஸ் ஏதாவது கொடுப்பார்கள். ஆனால் எல்லா நேரத்திலும் குழந்தைகளுக்கு ஜூஸ் கொடுக்கக் கூடாது. அதிலும் என்ன ஜூஸ் கொடுக்க வேண்டும் என்பதிலும் தெளிவாக இருக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு 10-வது மாதத்திலிருந்து பழச்சாறுகள் கொடுக்கலாம். காலை நேரங்களில் ஒரேமாதிரியான பழச்சாறுகள் கொடுப்பதைத் தவிர்க்கலாம். மேலும், சீசன் பழங்களான வாழை, அன்னாசி, முலாம், தர்பூசணி, கிவி போன்றவற்றை மாறிமாறிக் கொடுக்கலாம். ஆனால் இரவு நேரங்களில் மட்டும் சிட்ரிக் ஆசிட் நிறைந்த பழச்சாறுகளைக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

குழந்தைகளுக்கு ஜூஸ் கொடுக்க மிகச்சிறந்த நேரம், காலை 11 மணி மற்றும் மாலை 3 மணி. உணவு உண்டபின் பழச்சாறுகளைக் கொடுப்பதைத் தவிர்த்திடுங்கள். ஆனால், நெஞ்சுச் சளி, மூச்சுத்திணறல் உள்ள குழந்தைகளுக்கு ஜூஸ் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம்.

மேலும், இருமல் பாதிப்பு இருந்தாலோ குளிர்காலத்திலோ பழச்சாறுகளைக் குளிர்ச்சியாகக் கொடுக்கக்கூடாது. சளித் தொந்தரவு வரும் குழந்தைகளுக்கு, நன்கு காய்ச்சி ஆறவைத்த குடிநீரில் ஜூஸ் கலந்து தருவது நல்லது.

சில குழந்தைகளுக்கு சில பழங்கள் பிடிக்காது. அதுபோன்ற சமயங்களில் இரண்டு மூன்று பழங்களை ஒன்றாகக் கலந்து மிக்ஸ்டு ஃபுரூட்டாகக் கொடுப்பது நல்லது.

அதோடு வாழைப்பழம், மாதுளை போன்ற சில தோல் நீக்க வுண்டிய பழங்களைத் தவிர்த்து மற்றவற்றை தோலுடன் சேர்த்து அரைத்துக் கொடுங்கள்.

மேலும், பழங்கள், காய்கறிகள், கீரைகள், பருப்பு – பயறு வகைகள், தானியங்கள் எனக் கலவையான உணவைக் கொடுப்பது நல்லது. குழந்தைகளுக்கு அனைத்து வகையான உணவுகளையும் அளவாகக் கொடுக்கலாம். துரித உணவுகள், கார்பனேட்டட் பானங்கள் மற்றும் ஃபாஸ்ட்ஃபுட் போன்ற உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

முளைகட்டிய பயறுகளை சுண்டல் செய்து கொடுக்கலாம். செயற்கை நிறமூட்டப்பட்ட உணவுகளைத் தவிர்த்து, இயற்கையாக நிறமுடைய காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றைக் கொடுக்கலாம்.

பொம்மைகள், தோட்டத்தில் உள்ள பட்டாம்பூச்சி, செடிகள், பூக்கள் போன்றவற்றைக் காட்டி சாப்பிடப் பழக்கலாம்.

பார்ப்பதற்கு கலர்ஃபுல்லாக இருந்தால் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும்.