எப்போதும் போல் சோப் போட்டு குளித்த பிறகு இந்த பொடியை முகம், உடம்பில் தேய்த்து குளித்தால் பரு, கரும்புள்ளி, ஸ்ட்ரெட்ச் மார்க் எதுவும் வராது.
இதற்கு தேவையான பொருட்கள் :
கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
காய்ந்த பன்னீர் ரோஜா – 200 – நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் அல்லது பூக்கடையிலிருந்து வாங்கி வந்து காய வைத்து கொள்ளவும்.
வசம்பு – 100 கிராம்
கஸ்தூரி மஞ்சள் – 200 கிராம்
புனுகுப்பட்டை – 50 கிராம்
கடலைப்பருப்பு -100 கிராம்
பாசிப்பருப்பு – 100 கிராம்
இவை அனைத்தையும் வெயிலில் 5 நாட்கள் காய வைத்து மாவு அரைத்துக் கொடுக்கும் இடத்தில் கொடுத்து சீயக்காய் அரைக்கும் மிஷினில் அரைத்துக் கொடுக்க சொல்லி வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். சிறுவயதில் இருந்து இந்த பொடியை போட்டு குளித்து வந்தால் உடம்பில் முடி இருக்காது. ஏனென்றால் கஸ்தூரி மஞ்சள் முடியை போக்கும் தன்மை கொண்டது. சோப்பு போட்டு குளித்த பின் இந்த பொடியை போட்டு குளிக்க வேண்டும்.
2) இதே பொடியை உபயோகப்படுத்தி வாரத்திற்கு ஒரு முறை முகத்திற்கு பேக்(Face Pack) போடலாம். தயிர் – 1 ஸ்பூன் பொடி – 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு – 10 துளி எல்லாவற்றையும் கலந்து முகம், கழுத்து முழுவதும் தடவி காயும் வரை ஊறவைத்து கழுவவும். முகத்தில் பரு இருப்பவர்கள் மேலே சொன்ன பேக்குடன் 1 ஸ்பூன் முல்தானி மட்டி பொடி சேர்த்து பேக் போடவும்.
முல்தானி மட்டி முகத்தில் எண்ணெய் பசையை சுத்தமாக எடுத்து விடும். பரு வரவே வராது. எண்ணெய் பசை சருமம், முகபரு அதிகம் உள்ளவர்கள் வாரம் 1-2 முறையும், சாதாரண சருமம் உள்ளவர்கள் மாதம் ஒரு முறையும், உலர்ந்த சருமம் உள்ளவர்கள் தயிர் அதிகம் கலந்து மாதம் ஒரு முறையும் உபயோகப்படுத்தவும்.