தேவையான பொருள்கள்:
சப்பாத்தி – 6
உருளைக்கிழங்கு -1
குடைமிளகாய் -1
வெங்காயம் -2
தக்காளி -2
கேரட் -1
இஞ்சி -சிறியதுண்டு
பூண்டு-4 பல் பச்சைமிளகாய் -1
மிளகாய்த்தூள் -1 டீஸ்பூன்
கருவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு,சோம்பு,சீரகம்-சிறிதளவு
சமையல் எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
குடைமிளகாய்,வெங்காயம், தக்காளி, கேரட், இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய், உருளைக்கிழங்கு எல்லாவற்றையும் நீளவாக்கில் மெல்லியதாய் நறுக்கிக்கொள்ளவும் . கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு, சீரகம் தாளித்து வெங்காயம் போட்டு பொன்னிறமாக வதக்கிக்கொள்ளவும், பிறகு ஒவ்வொன்றாக போட்டு நன்றாக வதக்கிக்கொள்ளவும்,பிறகு மிளகாய்த்தூள்,உப்புச்சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவும்,மூடி வைத்து பத்து நிமிடம் கழித்து மெல்லியதாய் நறுக்கிய சப்பாத்தியை சேர்த்து கருவேப்பிலை.கொத்தமல்லி போட்டு நன்றாக கிளறவும், ஐந்து நிமிடம் கழித்து இறக்கவும் ,சப்பாத்தி நூடுல்ஸ் தயார்.