Home பெண்கள் அழகு குறிப்பு சன் கிளாஸ் வாங்கப்போறீங்களா? கவனம் !

சன் கிளாஸ் வாங்கப்போறீங்களா? கவனம் !

14

கொளுத்தும் கோடை வெயிலில் தொப்பி, கண்ணாடி இல்லாமல் வெளியில் போகமுடியாது. ஏனெனில் கோடையில் கண்களை பாதுகாப்பது அவசியம். என்றைக்காவது வெளியில் சென்றால் பாதிப்பு அதிகம் இருக்காது. ஆனால் அடிக்கடி வெளியில் சுற்றுபவர்கள் புறஊதாக்கதிர்களினால் பாதிக்கப்பட்டு கண் எரிச்சல், கண்சிவந்து போதல் ஏற்படும். இதனை தவிர்க்க சன்கிளாஸ் அணிந்து செல்வது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள்.

கண்ட கண்ட கூலிங்கிளாஸ்களை வாங்கி அணிவதை விட தரமான கண்ணாடிகளை வாங்கி அணிவதே கண்ணிற்கு பாதுகாப்பானது என்றும் மருத்துவர்களும், அழகியல் நிபுணர்களும் தெரிவிக்கின்றனர். அவர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.

உஷ்ணத்தில் பாதுகாப்பு

வெளியில் பயணம் செய்யும்போது ‘சன் கிளாஸ்’ அணிவதனால் உஷ்ணத்தில் இருந்து கண்களை பாதுகாக்கும். இதனால் கண்கள் சோர்வடையாமல் புத்துணர்ச்சியாக இருக்கும். முக்கியமாக கறுப்புக் கண்ணாடிகளே கண்களுக்கு குளிர்ச்சி. கோடைகாலங்களில் கறுப்பு கண்ணாடிகளே பெஸ்ட். ஏனென்றால் சூரிய வெளிச்சத்தில் இருக்கும் அல்ட்ரா கதிர்கள் 50 சதவீதம் 60 சதவீதம் வரை தாக்காமல் பாதுகாக்கின்றது.

சன் கிளாஸ் அணிந்து கண்ணாடியில் பார்த்தால் கண்கள் தெரிய கூடாது. அப்படி தெரிந்தால், அந்த லென்ஸ் உங்கள் கண்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்காது. எனவே கண்களை முற்றிலும் கவர் செய்யக்கூடிய சன் கிளாஸ் அணிவதே ஏற்றது. கண்களில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளவர்கள் அதற்கேற்ற கண்ணாடிகளை அணிய வேண்டும்.

சரியான சன் கிளாஸ்

சன் கிளாஸ் லென்ஸ் நிறத்தை தேர்தெடுக்கும் போது கவனம் தேவை. அதோபோல் சன் கிளாசிற்கு நாம் கொடுக்கும் விலை சரியானதுதானா என்பதை பார்க்கவேண்டும். லென்ஸ் மீது கீறல் விழாமல் இருப்பதற்கு என கோட்டிங் பூசப்பட்டிருக்கிறதா? என கவனிக்க வேண்டும். அதேபோல் தண்ணீர் மூலம் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க கோட்டிங் எதுவும் உள்ளதாக என கவனிக்க வேண்டும். புற ஊதாக்கதிர்களில் இருந்து கண்களை பாதுகாக்கக் கூடிய கண்ணாடிதானா என்பதை கண்டறிந்து வாங்குவது நல்லது.

முகத்திற்கு ஏற்ற ப்ரேம்

முக்கியமாக சன் கிளாஸ் ப்ரேம் முக அமைப்பிற்கு ஏற்றதாக இருக்கிறதா என ஒருமுறைக்கு இருமுறை போட்டுப்பார்த்து வாங்கவேண்டும். அதேபோல் லென்ஸ் வடிவம் ஓவல், சதுரம் முக்கோணம், வட்டம் என பலவடிவங்களில் உள்ளது அதில் எந்த வடிவம் நம்முகத்திற்கு ஏற்புடையதாக இருக்குமோ அதனை தேர்ந்தெடுத்து வாங்கவேண்டும் என்று ஆலோசனை கூறுகின்றனர் அழகியல் நிபுணர்கள்.

கோடை காலம் தொடங்கிவிட்டாலே கண் இமைகளின் மேல் வாரம் ஒருநாள் இரவு நேரத்தில் வாசலின் கொண்டு மென்மையாக மசாஜ் செய்து விட்டுப் படுக்கவும். இது கண் இமைகள் வறண்டு போகாமல் தடுக்கும்.