தேவையானவை:
ராகி மாவு – ஒரு கப்,
கோதுமை மாவு – அரை கப்,
பெரிய வெங்காயம் – 2,
உப்பு – 1 டீஸ்பூன்,
மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்,
எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
• வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும்.
• வாணலியில் எண்ணெய் விட்டு, அது காய்ந்ததும் வெங்காயத்தைப் போட்டு, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து, நன்கு வதக்கிவைத்துக்கொள்ளவும்.
• ராகி மாவில் உப்பு சேர்த்துக் கரைத்து, அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
• பிறகு, அதை கோதுமை மாவுடன் கலந்து தோசை தவாவை அடுப்பில் வைத்து, மெல்லிய தோசைகளாக வார்க்கவும்.
• சுற்றிலும் எண்ணெய் விட்டு, இருபுறமும் வேகவிட்டு எடுக்கும்போது, தோசையின் நடுவே வதக்கிய வெங்காயத்தை வைத்து, சுட்டுஎடுக்கவும்.
குறிப்பு: முதல் நாள் இரவேகூட, ராகி மாவைக் கரைத்து வைத்து, மறுநாள் உபயோகப்படுத்தலாம். கோதுமை மாவையும்தண்ணீர் விட்டுக் கட்டி இல்லாமல் கரைத்து, ராகி மாவுடன் சேர்த்துக் கலந்துகொள்ள வேண்டும்.