தேவையான பொருட்கள்
கோதுமை மாவு – 250 கிராம்
எள்ளு – 25 கிராம்
கசகசா – 50 கிராம்
தேங்காய் – 1
ஏலக்காய் – 5
சர்க்கரை – 200 கிராம்
நெய் – 25 கிராம்
நல்லெண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
ஏலக்காய் பொடி, எள்ளு, கசகசா, தேங்காயை நன்றாக துருவி எடுத்து இவைகளை தனித்தனியாக நெய்யில் பொன் நிறம் சிவக்க வறுக்க வேண்டும். சர்க்கரையை சேர்த்து இந்த பொருட்களை ஒன்றாகக் கலக்கவும்.
மாவை சப்பாத்தி மாவு போல் பிசைந்து, இந்த மாவை சிறிது உருண்டையாக உருட்டி, பிளாஸ்டிக் பேப்பரை விரித்து அதன் மீது நல்லெண்ணெய்யை தடவி அப்பளம் போல் அகலமாக செய்து கொள்ள வேண்டும். தேங்காய் தூள் 2 தேக்கரண்டி அளவில் எடுத்து வைத்து மடித்து விடவும். பிறகு எண்ணெய்யை தடவி பூரிபோல் தேய்த்து எடுத்து தோசைக்கல்லில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய்யை ஊற்றி இதை போட்டு மறுபுறம் புரட்டவும் நன்றாக சிவந்த பின் எடுத்து தட்டில் வைத்துக் கொண்டு சூடான பாலில் தேங்காய் போலியை தொட்டு சாப்பிட்டால் ருசி மிக்கதாக இருக்கும்.