Home சமையல் குறிப்புகள் கோதுமை, பீட்ரூட் பேன் கேக்

கோதுமை, பீட்ரூட் பேன் கேக்

18

1dce465b-d99b-4543-ad63-4e536e781356_S_secvpfதேவையான பொருட்கள்:

கோதுமை மாவு – ஒரு கப்,

பீட்ரூட் – 2,

பால் – ஒரு டேபிள்ஸ்பூன்,

கருப்பட்டி அல்லது வெல்லம் – ஒரு

டீஸ்பூன்,

பேக்கிங் சோடா – ஒரு சிட்டிகை,

தேன் – 2 டீஸ்பூன்,

எண்ணெய் – ஒரு டீஸ்பூன்,

உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை:

• பீட்ரூட் துருவி தண்ணீர் விட்டு மிக்ஸியில் நைஸாக அரைத்து வைக்கவும்.

• ஒரு பாத்திரத்தில் பீட்ரூட் அரைத்த கலவையை போட்டு

அதனுடன் கோதுமை மாவு, பால், கருப்பட்டி அல்லது வெல்லம், உப்பு, பேக்கிங் சோடா, எண்ணெய் சேர்த்து நன்றாகக் கலக்கவும்

(இட்லி மாவு பதத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்).

• தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை கனமான தோசை போல

வார்த்து, மூடிவைக்கவும். வெந்ததும் திருப்பிப் போட்டு எடுக்கவும்.

• அதன் மீது தேனைத் தடவி துண்டு போட்டு கொடுக்கவும். இதை

குழந்தைகள் மிகவும் விரும்புவார்கள்.

• விருப்பப்பட்டால், முட்டையை அடித்து அதனுடன் மாவைக் கலந்தும் செய்யலாம்.